கொரோனா பரவும் நிலையில் ஏசி-க்கு ஏற்ற வெப்பநிலை எது? - kalviseithi

Apr 26, 2020

கொரோனா பரவும் நிலையில் ஏசி-க்கு ஏற்ற வெப்பநிலை எது?

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஏ.சி., பொறியாளர்களுக்கான இந்திய சங்கம், ஏ.சி அறைகளுக்கு ஏற்றவெப்பநிலை பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து தினமொரு ஆராய்ச்சி முடிவுகள், விஞ்ஞானிகளின் கருத்துகள் வெளிவருகின்றன. ஆரம்பத்தில் எந்தவொரு வெப்பநிலையும் கொரோனா வைரஸை பாதிக்காது என கூறப்பட்டது.

தற்போது அமெரிக்க ஆய்வாளர்கள் சூரிய ஒளி, வெப்பம், அதிக ஈரப்பதத்தில் கொரோனாவின் வாழ்நாள் குறைவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏ.சி, பிரிட்ஜ் பொறியாளர்களுக்கான இந்திய சங்கம், வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், அறையில் ஏ.சி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரிசெல்சியசுக்குள் இருக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதத்திற்குள் இருக்கலாம்.

வீடு, தொழிற்சாலை அல்லது வணிக நிறுவனங்கள் எதுவோ, ஏ.சியில் உள்ள காற்று வடிகட்டியை சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். அறையினுள் உள்ள காயில்களை ஆய்வு செய்து சுத்தம் செய்திருக்க வேண்டும்.குளிர்ந்த காற்றின் மறு சுழற்சிக்காக ஜன்னல்களை லேசாக திறந்து, காற்று வெளியேறவும், வெளிப்புற காற்று உள்ளே வரவும் வழி செய்திருக்க வேண்டும். மேலும், நீடித்த ஊரடங்கினால் செயல்படாமல் இருக்கும் நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட இடங்கள், உள்ளே இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து பூஞ்சை போன்றவற்றால் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி