அரசு ஊழியர், ஆசிரியர் நிதியுதவி ஏற்பு விரும்பினால் ஊதியம் பிடிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

அரசு ஊழியர், ஆசிரியர் நிதியுதவி ஏற்பு விரும்பினால் ஊதியம் பிடிக்க உத்தரவு


'கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதி வழங்க விருப்பம் தெரிவித்தால் ஏற்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

'கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. அதேபோல, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும், சம்பளத்தை வழங்க முன் வந்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை செயலர்,சண்முகம் நேற்று பிறப்பித்த அரசாணை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள், தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களின் சம்பளத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு வழங்க முன்வந்தால், அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் விருப்பத்தை, சம்பளம் வழங்கும் அலுவலருக்கு தெரிவித்தால் மட்டுமே, அவர்கள் விரும்பும்ஊதியம், நிவாரண பணிக்கு பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் நகல், பள்ளி கல்வி மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனரகங்கள் வழியாக, மாவட்ட கல்வி அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி