‘நீட்’ தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2020

‘நீட்’ தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி,பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அந்த தேர்வையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் எதுவும் இருந்தால், அதை திருத்தி கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

தேசிய தேர்வு முகமையின் nta-n-eet.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் இல்லாமலும், இரவு 11.50 மணிக்குள் கட்டணத்தோடும் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை nta-n-eet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி