எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘அந்த கேள்விக்கே இடமில்லை’ என அமைச்சர் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2020

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘அந்த கேள்விக்கே இடமில்லை’ என அமைச்சர் பதில்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்றகேள்விக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதோடு, இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன.இதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்தநிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது?

பதில்:- 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதன்பிறகு இருக்கும் நிலைமையை பொறுத்து, இறுதி முடிவை முதல்-அமைச்சர் தான் தெரிவிப்பார். பள்ளிக்கல்வி துறை தயார்நிலையில் தான் இருக்கிறது.

கேள்வி:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்தால், என்ன விளைவு ஏற்படும்?

பதில்:- ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

3 comments:

  1. Honourable minister for education has rightly clarified

    ReplyDelete
  2. இந்த பதில் தான் மிகவும் சிறந்தது
    நம் மாணவ மாணவியர் வருங்காலத்திற்கு..

    ReplyDelete
  3. The Honourable minister's stand is correct. Exams should be conducted as usual however laye it is to be

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி