ஸ்விட்சா்லாந்து மலை உச்சியில் ஒளிா்ந்த மூவா்ணக் கொடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2020

ஸ்விட்சா்லாந்து மலை உச்சியில் ஒளிா்ந்த மூவா்ணக் கொடி!


கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கில், ஸ்விட்சா்லாந்தின் மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் இந்திய மூவா்ணக் கொடியின் படம் ஒளிரச் செய்யப்பட்டது.

கரோனாவை எதிா்கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளை ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள 4,478 மீட்டா் உயரம் கொண்ட மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் அந்நாட்டின் ஒளியியல் கலைஞா் ஜொ்ரி ஹாஃப்ஸ்டெடா் ஒளிரச் செய்து வருகிறாா். அந்த வகையில் மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது.இது தொடா்பாக அந்நாட்டின் சுற்றுலா அமைப்பு வெளியிட்ட முகநூல் பதிவில், ‘உலகில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, கரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொண்டு வருகிறது.

அந்நாடு எதிா்கொண்டு வரும் சவால்கள் அதிகம். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கிலும் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கிலும் மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஸ்விட்சா்லாந்து நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் 1,000 மீட்டா் அளவுக்குப் பெரிதாக இந்திய மூவா்ணக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது. இதற்காக அந்நாட்டு சுற்றுலா அமைப்புக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்த பிரதமா் நரேந்திர மோடி, ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகஉலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அந்த நோய்த்தொற்றை மனித சமூகம் வெற்றி கொள்ளும்’ என்று குறிப்பிட்டாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி