எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில். - kalviseithi

Apr 4, 2020

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்.


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தி இருக்கிறது. ஊரடங்கு முடிந்த முதல் நாளில் தேர்வு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தேர்வு திட்டமிட்டபடி அதே தேதியில் தொடங்குமா? கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? என்பது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘மத்திய அரசு வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து இருக்கிறது. ஆகவே நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.

7 comments:

 1. "எடப்பாடி பழனிச்சாமி பதில்" என்று எழுதாமல் முதல்வர் பதில் என்று கண்ணியமாக எழுதலாமே ... எதை விதைகிராயோ அதுவே அறுவடை ஆகும்.

  ReplyDelete
 2. அவர் நமது முதலவர் மரியாதை குடு பது நமது நாட்டின் பண்பு நலன் மறைக்க வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. Bro PMK leader. முதல்வராக இருந்தால் ஒருவேலை Kalviseithi group மரியாதை கொடுத்திருக்கும்

   Delete
  2. Kalviseithi நடுநிலை கல்வியாளர் இல்லை,
   என்பதை கூறியமைக்கு நன்றி!
   இந்த கருத்து ஆசிரியரால்
   பிரசுரம் ஆகாது...

   Delete
 3. இங்கு வரும் செய்தி எல்லாமே தினசரி நாழிதழ்களின் இணையப் பதிவுகளின் வெட்டி ஒட்டுதல் மட்டுமே.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி