Flash News : தமிழகத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2020

Flash News : தமிழகத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்  தமிழகத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

நாளை பிரதமர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவானது தமிழகம் முழுவதும் தற்போது உள்ள அதே நிலையே தொடரும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தயாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும்

ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும்

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்

கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும்

காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம், பார்சல் முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும்

பிறமாநில தொழிலாளர்களுக்கு 15கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்

ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது வாபஸ் பெறப்படவில்லை

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு

3 comments:


  1. எல்லாருக்குமே 1000 கொடுக்கனும்

    ReplyDelete
  2. This is the good move by the govt.if they freed in this time it will be difficult task for us to servive from covid19

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி