Flash News : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

Flash News : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு. அதன்படி , மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.

10 comments:

  1. மாநில அரசும் இதே முடிவை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. State government should act in the same line

    ReplyDelete
  3. ஒரேயடியாக 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வை ரத்து செய்திருப்பதைப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது

    ReplyDelete
  4. நிச்ச‌ய‌ம் இந்திய‌ பொருளாதார‌ம் மிக‌வும் ச‌ரியும்...நுக‌ர்வோரின் வாங்கும் திற‌ன் குறையும்...ப‌ண‌வீக்க‌ம் அதிக‌ரிக்கும்..அப்ப‌டியே அந்த‌ புது நாடாளும‌ன்ற‌ம் 20000 ஆயிர‌ம் கோடிக‌ளில் க‌ட்டும் திட்ட‌த்தையும்,அர‌சின் அதீத‌ விள‌ம்ப‌ர‌ செல‌வையும் கைவிட்டால் மிக‌ மிக‌ ந‌ன்றாக‌ இருக்கும்...
    செய்வார்க‌ளா ஆட்சியாள‌ர்க‌ள்?...

    ReplyDelete
  5. State government annocement the same decision

    ReplyDelete
  6. D a arriyar vanka servent erukkamattan corona kontrum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி