Kalviseithi Evening Headline News - April 24 - kalviseithi

Apr 24, 2020

Kalviseithi Evening Headline News - April 24


# இந்திய நாட்டில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு பரவாமல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

# சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் விரைவில் அழிந்து விடும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.

# Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு : ஆவின் பால் மற்றும் வெண்ணெய் , நெய் உள்ளிட்ட உபப்பொருட்களை ஆர்டர் செய்து பெறலாம் - ஆவின் நிர்வாகம்.

# பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

# சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு : தமிழக முதல்வர் பழனிசாமி.

# நாளை முதல் ரமலான் நோன்பு : தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவிப்பு.

# தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் - தமிழக சுகாதாரத்துறை.

# செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு.

# கோவை மாநகரில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

# முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் - முதல்வர் பழனிசாமி.

# கொரோனா நோயிலிருந்து குணமடைந்து தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் டிஸ்சார்ஜ்.

# தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு
கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக அதிகரிப்பு.

# பெரம்பலூரில் ஏப்.27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு : காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை.
பொதுமக்கள் 3 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல் - மாவட்ட நிர்வாகம்.

# திருச்சியில் ஏப்.26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் செயல்படத் தடை - மாவட்ட நிர்வாகம்.

# டெல்லி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 14 வயதான பெண் புலி இன்று உயிரிழந்ததையடுத்து, அதன் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

# முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி - முதல்வர் பழனிசாமி.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது முதியவர் உட்பட இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

# ரமலான் நோன்பு நாளை முதல் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதிகளுக்கு வர வேண்டாம் - மசூதி நிர்வாகிகள்.

# டெல்லியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

# கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது - உள்துறை இணைச் செயலாளர்.

# முழு ஊரடங்கின் போது ஊடகத்துறைக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

# விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

# அர்னாப் கோஸ்வாமியை 3 வாரங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

# பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் - நடிகர் கமல்ஹாசன்.

# குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

# ஊரடங்கு காலத்தில் பொறியியல் கல்லூரிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கல்விக் கட்டணத்தை செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி