May 14, 2020
ஜுன் 01 பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த சாத்தியமா?
தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ஜுன் 01 முதல் 12 வரையில் நடத்த தீர்மானித்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
அவ்வாறு தேர்வு நடத்த வேண்டுமானால் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வேண்டும்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தூய்மை படுத்தப்படவேண்டும்.
பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவேண்டும்.அப்போதுதான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரமுடியும்.
தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமாகையால் ஒரு அறைக்கு10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும்.
இதனால் கூடுதல் அறைகள்,கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
ஏற்கனவே ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு பணியும் ஒதுக்கீடு செய்யயப்பட்டு விட்டன.
கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு கால அவகாசம் போதுமா தெரியவில்லை.
தேர்வு அறைக்குள் நுழையும் மாணவ மாணவிகளுக்கு சானிடைசர் மூலம் கைகளை கழுவிவர அனைத்து தேர்வு மையங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும்.
தேர்வு அறையிலும் கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் அருகாமையில் சென்று நுழைவுச்சீட்டை சரி பார்த்து கையொப்பமிடவோ,கூடுதலாக விடைத்தாள் வழங்கவோ,தேர்வு முடிந்து எழுதப்பட்ட விடைத்தாள்களை வாங்கவோ,காப்பியடித்தால் பிடிக்கவோ முடியாது.
எந்த மாணவனுக்கும் தொற்று இல்லை என்பதை எவரும் உறுதியாக கூறமுடியாததால் அவர்களை காய்ச்சல், இருமல்,சளி மருத்துவ பரிசோதனை நடத்தித்தான் அனுப்ப வேண்டும். இதற்கு ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
சொல்வதை கேட்டு எழுதும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பார்வையற்ற மாணவர்களுக்கு வினாவை கூறி புரிய வைப்பதிலும்,விடையை கேட்டு எழுதுவதிலும் இச்சமூக இடைவெளி சிரமம் கொடுக்கும்.
இத்தனை கெடுபிடிகளைக் கடந்து பதட்டம் ஏதும் இல்லாமல் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும்.
எழுதி முடித்த விடைத்தாட்களை சீல் வைத்து தேர்வு அலுவலர் சமூக இடைவெளியில் சரிபார்த்து கவரில் போட்டு அடைக்க செய்ய வேண்டும்.
இத்தனை சோதனைகளைக்கடந்து வாகன ஓட்டுனர் தொற்று இல்லாதவரா என சோதித்த பின்னரே அவரது வாகனத்தில் விடைத்தாள் ஏற்றி வழித்தட அலுவலர் செல்ல முடியும்.
இதன் ஒவ்வொரு நிகழ்விலும் சுகாதார விழிப்புணர்வு தேவைப்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தேர்வுத்துறை எந்த ஒரு மாணவனுக்கும் பாதிப்பு வராமல் தேர்வை எங்ஙனம் நடத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-நாஞ்சிலார்.
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
10thexamjulylast natathalam
ReplyDeleteஆசிரியர் பணியாற்றும் பள்ளிக்கும் தேர்வு மையத்திற்கு 50 கிமீ இருக்கும்...
ReplyDeleteபலர் வெளி மாவட்டத்தில் இருப்பார்கள்
இலவச பஸ் பாஸ் என்பதால் 30 கிமீ தள்ளி அடுத்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர் . தேர்வு எழுத வேறு மாவட்டம் செல்ல வேண்டும்
ReplyDeleteஇத்தனை தடைகளை கடந்து தேர்வுகளை நடத்தி உயிர்சேதம் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை ஏன் என்றால் நாம் எல்லாக்கோணத்திலும் சிந்தித்து செயல்படவேண்டும் காரணம் அன்றாடம் நடக்கும் செயல்களை பார்த்தால் நாம் கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்ற சூழ்நிலைதான் அதிகமாக தென்படுகிறது இதில் இருப்பவர்கள் யார் இறப்பவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது மேலும் மற்ற மாநிலங்களில் தேர்வு பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபோது நாம் மட்டும் ஏன் இவ்வாறு டில்லியில் சி பி எஸ் சி தேர்வுகளே வகுப்புத் தேர்வுகளின் அடிப்படையிலும் செயமுரைதேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்யும் போது அது ஏன் நம் மாநிலத்தில் முடியாது எனவே எதைச் செய்தாலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயலாற்றினால் தான் இதிலிருந்து விடுபடமுடியும் மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேர்வுக்கு அனுப்புவது குறித்து இப்போதிருந்தே மன உளைச்சலுடனும் கவலையுடனும் உள்ளார்கள் எனவே அரசு இதனை யோசித்து எந்த ஒரு மனித உயிருக்கும் இழப்பு ஏற்படா வண்ணம் முடிவு எடுக்க வேண்டும்
ReplyDeleteMany students are caught in different districts and states. How they can manage to come with out proper train/bus fecility during lockdown time.
ReplyDeleteஇநத அவசர முடிவினால் பொதுமக்களிடம் தமிழக அரசுக்கு தேவையின்றி கெட்டபெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மறுபடியும் சிந்தித்து முடிவுகள் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
ReplyDeleteமிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்போது மக்கள் புழக்கத்தில் எவ்வித பரவலும் இல்லை. அது போன்று அரசு தேர்வை எளிதாக நடத்தி செல்லும் பார்வையற்ற மாணவர்களுக்கும் எழுதும் ஆசிரியர்களுக்கும் நோயின் அறிகுறிகளை வைத்து முடிவு பண்ணிக் கொள்ளலாம் பத்து லட்ச மாணவர்களில் பத்து பேர் இருப்பார்கள்? .
ReplyDeleteSSLC தேர்வு கொரோனா காரணமாக ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை இம்முறை மூலம் அறிவிக்கலாம்.
ReplyDeleteகாலாண்டு அரையாண்டு மார்க் படி குழப்பம் வராம மார்க் போட முடியும்
இந்த முறைப்படி யாருக்கும் மார்க் குறையாமலும் கூடாமலும் மார்க் போடலாம்
இப்ப காலாண்டு அரையாண்டு சராசரி மார்க் 463 னு வச்சுக்கோங்க
இப்ப எவ்ளோ மார்க் குறைந்திருக்கோ அதுக்கு percentage கண்டு பிடிக்க வேண்டும்
500-463=37
37÷500×100=7.4
அடுத்து இந்த percentage அ நம்ம எடுத்த மார்க் உடன் சேர்த்து வர மதிப்ப கண்டு பிடிக்கனும் சார்
Then,7.4÷100×463=34.262
வர மதிப்ப 2 ஆல் வகுக்கனும்
34.262÷2=17.131
இந்த மதிப்ப பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)உடன் கூட்டனும் .
17.131ஐ தோராயமாக 17 னு எடுத்துக்கலாம்
Then463+17=480
இந்த முறைப்படி எந்ந மதிப்பெண் ணுக்கும் மார்க் குறையாமல் ரொம்ப கூடாமலும் போடலாம்
நீங்க வேணும்னா வேற நம்பர் வச்சு செய்து பாருங்க .
சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மேல இருக்குற முறைய சுருக்கி ஒரு formula கொண்டு வரலாம்.
X=பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)
y=குறைந்த மதிப்பெண் (500-x)
Formula:
X + yx ÷1000 (or)
X(1000+y)÷1000
தனி தனியா subject mark கண்டுபிடிக்க
X+xy÷200
ஏதேனும் தவறு இருப்பின் கூறவும்
முக்கிய குறிப்பு:தமிழக்த்தில் கொரோனா தீவிரமடைந்து மாணவர்கள் நலன் கருதி தேர்வு ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க இம்முறையினை பயன் படுத்தலாம்
Correct method.
DeleteIn Tamilnadu , Day by Day Corona Impacted cases getting increased. Conducting exams in this situation is very risky.. At least Govt can analyse the situation for a month and can conduct the exams on July 1st Or 2nd week. When other states are giving importance to students safety, why TN govt not considering it..?
ReplyDelete