12th Public Examination July 2020 - CBSE Publ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2020

12th Public Examination July 2020 - CBSE Publ!


ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில், ஒத்தி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 18ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடப்பட்டது.  மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு  நடைபெறுகிறது.டெல்லி மற்றும் பிற மாநில சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விடுபட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு போதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிவதோடு, சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அஅறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி