யு.பி.எஸ்.சி., தேர்வு ஒத்திவைப்பு புதிய தேதி 20ம் தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2020

யு.பி.எஸ்.சி., தேர்வு ஒத்திவைப்பு புதிய தேதி 20ம் தேதி அறிவிப்பு


'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி, வரும், 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரி கள் என, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் மே, 31ம் தேதி நடைபெறவிருந்த, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:யு.பி.எஸ்.சி., தலைவர் அரவிந்த் சக்சேனா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை ஒத்திவைப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதி, இது குறித்து மீண்டும் ஆலோசிக்கவுள்ளோம்.அப்போது நிலவும் சூழலை வைத்து, புதிய தேதி அறிவிக்கப்படும்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்காக, நாட்டில் உள்ள பள்ளிகள், தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், வரும், 31ம் தேதி திட்டமிட்டப்படி தேர்வு நடந்தால், தேர்வு மையங்கள் அமைந்துள்ள ஊருக்கு பயணிப்பதில், மாணவர்களுக்கு சிரமம்ஏற்படும். எனவே தான், தேர்வாணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவி ஒருவர் கூறுகையில், 'முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுகவலையளிக்கிறது. எனினும், மாணவ - மாணவியருக்கு, தேர்வுக்கு தயாராக கூடுதல் நேரம் கிடைத்துள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி