அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2020

அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு


சென்னை கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த பலர் சரக்கு வாகனங் கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள அவரவர் கிராமங் களுக்குஅண்மையில் வந்தனர்.

இவர்களில் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப் பது தெரியவந்தது. இதை யடுத்து, அவர்களையும், அவர் களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும், வேப்பந் தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த நேற்று முன்தினம் இரவு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கரோனா வைரஸ் தொற்று சந்தேகம் உள்ளவர்களை பள்ளியில் தங்க வைத்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்,அவர்களை அங்கு தங்க வைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தற் கொலை செய்து கொள்வதாகக் கூறி, நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா, மங்கல மேடு டிஎஸ்பி தேவராஜன் தலை மையிலான போலீஸார் அங்கு சென்று பொது மக்க ளுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படவில்லை.

இதை யடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி