ஆசிரியர்கள் அனைவரும் மே 21 பள்ளிக்கு வர அவசியமில்லை - விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டும் மே 26 வர வேண்டும் - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

ஆசிரியர்கள் அனைவரும் மே 21 பள்ளிக்கு வர அவசியமில்லை - விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டும் மே 26 வர வேண்டும் - CEO செயல்முறைகள்!

மார்ச் -2020 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிகள் விழுப்புரம் / கள்ளகுறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 27.05.2020 முதல் நடைபெறவுள்ளது , மையமதிப்பீட்டு பணியினை சிறப்பாக நடத்துதல் தொடர்பாக அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்காண் அறிவுரைகள் வழங்கப்படுகிறது - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

1. மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.05.2020 அன்று , முதல் நடைபெறவுள்ளதால் 26.05.2020 அன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைபுரிய வேண்டும் எனவும் , ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகைதந்திருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களின் நலன் கருதி கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கட்டாயம் முகாம் பணியாற்றிட வேண்டும் எனவும் , எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .


3. விடைத்தாள் திருத்தும் முகாம் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது .

1)DCE / SO 27.05.2020
2 ) AE'S 28.05.2020

4. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னிட்டு 21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது , தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.


5. முதுகலை ஆசிரியர்களின் மைய மதிப்பீட்டு முகாம் பணிகள் சார்ந்த விவரம் , சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


13 comments:

  1. For private teacher also this information

    ReplyDelete
  2. வெளிமாவட்ட ஆசிரியரகள் 200கிலோமடடர் தொலைவில் உள்ள பேருந்து வசதி இல்லாத முதுகலை ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது

    ReplyDelete
  3. வெளி மாவட்ட ஆசிரியர்கள் தங்களது
    கல்வி மாவட்டத்திற்கு செல்ல e pass
    பெற வழிமுறைகள் பதிவு செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. E pass இருந்தால் தடை செய்யபட்ட மாவட்டஙகளுக்கு பேருந்து விடுவார்கள

      Delete
  4. நம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை அதே நேரத்தில் வெறுமாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தற்போது இருக்கும் மாவட்டத்திலேயே பனி செய்ய ஏற்பாடு செய்தால் நல்லது தானே இதில் எந்த சிக்கலும் இல்லை இது போன்ற அவசர காலத்தில் இது தேவையானது மேலும் எப்படியோ வேலை நடக்கிறது அது போதாத தேவை இல்லாமல் அவர்களை அலைய வைப்பதில் அற்ப சந்தோஷத்தை தவிர வேறு என்ன கிடைத்து விடப் போகிறது please சற்று சிந்தியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிலையை சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    2. S u r correct. Plz gov think our situation. I hv 6 month baby also. My school is 700km from my hometown.

      Delete
  5. தொலைதூர மாவட்டத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் ஆசிரியைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. விடுதிகள் மூடப்பட்ட நிலையில் எங்கே தங்குவார்கள்?

    வாடகை வீட்டில் தங்கி பணிபுரிபர்களும் வீட்டு உரிமையாளர்களின் எதிர்ப்பால் தங்குவதில் சிக்கல்கள் உள்ளன.

    ReplyDelete
  6. அரசு தற்போது எந்த முயற்சியும் எடுக்காது.Tasmac மூடுங்கள். சரியாக பஸ் வசதி செய்து தரப்படும். தற்போது அரசுக்குtasmac திறந்தாச்சு . so பஸ் மூலம் வரக்கூடிய income தேவையில்லை. ஆசிரியர்கள் மீது அக்கறை வரவே வராது.

    ReplyDelete
  7. Private teacher nalaiku school poganum..In thivallur district

    ReplyDelete
    Replies

    1. Private teacher nalaiku school poganum..In thiruvallur district

      Delete
    2. No need. This is for all schools

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி