தொழிலாளர்கள் தங்களது பி.எப். பங்களிப்பு தொகையை மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 10 சதவீதம் செலுத்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழிலாளர்கள் ஈட்டுறுதி வாரி யம் (இபிஎப்) துறைக்கு அனைத்து முறைப்படுத்தப்பட்ட தொழில் களில், தொழிலாளர்களின் பங் களிப்பாக 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகை தொழில் நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்தப்படும்.கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தால் பெருமளவு தொழில்கள் முடங்கியுள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 100 ஊழியர்களுக்கும் குறைவான பணியாளர்களில் 90 சதவீதத்தின ரின் மாத ஊதியம் ரூ.15 ஆயிரத் துக்கும் குறைவாக இருப்பின் தொழிலாளி மற்றும் தொழில் நிறுவனங்களின் 24 சதவீத பி.எப். பங்களிப்பை அரசே செலுத்துவ தாக அறிவித்துவிட்டது. இதன்படி 3.67 லட்சம் தொழில் நிறுவனங் களும், 72.22 லட்சம் ஊழியர்களும் பயனடைந்துள்ளதாக சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.இது தவிர பிற நிறுவனங்களில் ஊழியர்களின் பங்களிப்பை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் மூலம் ஊழியர்களின் கையில் கணிசமான தொகை புரளும். இதன் மூலம் 4.3 கோடி ஊழியர்கள் பயனடைவர்.பணியாளர்களின் கையில் அடுத்த 3 மாதங்களில் புரளும் தொகை சுமார் ரூ.6,750 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பி.எப். பங்களிப்பு குறைக்கப் பட்டது தொடர்பான அறிவிப்பை மத்திய தொழிலாளர் அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் பி.எப். பங்களிப்பு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவதால் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும். அதேசமயம் தொழில் நிறுவனங் கள் அளிக்க வேண்டிய பங்களிப் பும் குறைவதால் இது தொழில் நிறுவனங்களுக்கும் சாதகமான தாக இருக்கும்.மத்திய பொதுத்துறை நிறு வனங்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்த அரசு நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தாது. அதனால் வழக்கமான 12 சதவீத பங்களிப்பு பிடித்தம் செய்யப்படும் என இபிஎப்ஓ வெளியிட்ட அறிவிக்கை தெரிவிக்கிறது.
கரோனா பாதிப்பால், பி.எப். சேமிப்பில் இருந்து 75 சதவீதம் வரை தொழிலாளர்கள் பணத்தைத் திரும்ப பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் ரூ.3,360 கோடியை தொழிலாளர் கள் எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி