தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம்? தமிழக அரசிடம் தனியார் பள்ளிகள் பரிந்துரை! - kalviseithi

May 20, 2020

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம்? தமிழக அரசிடம் தனியார் பள்ளிகள் பரிந்துரை!


தனியார் பள்ளிகள் மனு 'ஜூலையில், பள்ளிகளில் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மெட்ரிக், மேல்நிலை பள்ளிகள் சங்கங்களின் சார்பில், பள்ளி கல்வி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள மனு:

தமிழகம் முழுதும், பள்ளிகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து, ஜூலையில் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு முன், ஜூன், 15 முதல், 30க்குள், புத்தகம், நோட்டு வழங்குவது, கல்வி கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. மாணவர்கள் முக கவசம், கையுறை அணிந்து வரலாம்.பள்ளிகளில், 'சானிடைசர்' தரப்பட்டு, அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பள்ளியில் நுழைவதற்கு முன், கால்களை கழுவி விட்டு வரவும் ஏற்பாடு செய்வோம்.சமூக இடைவெளி பின்பற்றப்படும்.

ஜூலையில் இருந்து, தினசரி வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம். கொரோனா தாக்கம் இருந்தால், மாணவர்கள் சுழற்சி முறையில்,பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

21 comments:

 1. தமிழகம் முழுதும், பள்ளிகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து, ஜூலையில் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு முன், ஜூன், 15 முதல், 30க்குள், புத்தகம், நோட்டு வழங்குவது, கல்வி கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தனியார் பள்ளிகளின் நடிப்பு ஆரம்பம்...

   Delete
 2. அரசு தனியார் பள்ளிக்கு அறிவுரை கூறியது போல இன்று தனியார் பள்ளிகள் அரசுக்கு ஆலோசனை சொல்லுகின்றன.பல மாநிலங்களில் 50 சதவீத கட்டண தள்ளுபடி அறிவிப்பதாக அறிவித்துள்ளன ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் 50% கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இவர்களுடைய நோக்கம் கல்விக் கட்டணத்தை கொள்ளையடிப்பது தான் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் செய்வது இரண்டாவது வேலைதான்.

  ReplyDelete
 3. Selvam sir call me 8220093698

  ReplyDelete
 4. பள்ளிகளை சீக்கிரம் திறக்க இவர்கள் அனுமதி கோருவது பணம் பிடுங்கவே இந்நேரம் தனியார் பள்ளிகள் லட்சங்களை குவித்திருப்பார்கள் தற்போது அது தடைப்பட்டுள்ளது பெரும்பான்மையான பள்ளிகள் அரசியல் சார்ந்த வர்களிடமே உள்ளது எனவே அரசு அவர்களுக்கு சாதகமாகவே முடுவுகளை எடுக்கும் ஆனால் இந்த அரசு சூழ் நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்காக 50% கட்டணத்தை குறைக்க வழி செய்வார்கள் என நம்புகிறேன்

  ReplyDelete
 5. இவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக இவ்வளவு அக்கறையாக அரசிடம் கோரிக்கை வைக்கிறார்களே . தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லாமல் இருக்கிறார்களே அவர்களின் நிலையையும் அவர்களின் குடும்பத்தாரின் நிலைமையையும் சற்றேனும் சிந்தித்திருப்பார்களா இவர்கள் . யாருக்கு என்ன ஆனால் என்ன இவர்களுக்கு வருமானம் வந்தால் சரி. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்குமாறு செய்ய வேண்டும் . மேலும் பள்ளிக் கட்டணத்தில் 50% மட்டும் வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும் . இதுவே எங்களின் வேண்டுகோள் .

  ReplyDelete
 6. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேருங்கள். குறைகள் இருந்தால் அதனை பள்ளியில் கேளுங்கள். சரி செய்ங்கள். அரசுப் பள்ளி நம் சொத்து அதை சரி செய்வது நம் கடமை. தப்பித்துக் கொள்வதாக நினைத்து தனியார் பள்ளிகளில் மாட்டிக் கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Correct sir.. If you find any issues,please go to the school and share your ideas.. In govt school there are many teachers come from merit... Please Utilize thrm

   Delete
 7. தனியார் பள்ளிகளை அரசு கையகபடுத்த வேண்டும்

  ReplyDelete
 8. private schools must compensate one crore rupees if any child contact corona in school because they are eager to make money without concern of children health

  ReplyDelete
 9. கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளே மாணவ குழந்தைகளை மண்ணுக்குள் புதைக்காமல் விடமாட்டீர்கள் அப்படி தானே? பிணமானாலும் பணம் முக்கியம் எனத் திரியும் உங்களையெல்லாம் முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.

  ReplyDelete
 10. ப(பி)ணம் தின்னி கழகுகள் வட்டமடித்து பறக்கிறது.

  ReplyDelete
 11. முதல்ல தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திட்டு அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை பாருங்க. தன்னால எல்லாம் அடங்கிடும்.

  ReplyDelete
 12. If we pay the fees they won't ask for school reopening of school.Because they are not concerned about the student lives.money matters.

  ReplyDelete
 13. let us join our children in govt schools

  ReplyDelete
 14. And how do expect somebody to run a school without funds

  ReplyDelete
 15. Yes private schools did not bother about students...each and every private school is money minded..teachers should work for them like a slave...many teachers will be affected mentally. .if the case is not getting decrease there is no assurance of sending children to school..school should give insurance to each and every child..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி