JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்.


பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமைமீண்டும் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கரோனா எதிரொலியாக ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இந்திய  மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஜேஇஇ-முதன்மைத் தேர்வு விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி, மே 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பக்  கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 24, இரவு 11.50 என்றும் தெரிவித்தார்.'வெளிநாடுகளில் பொறியியல் பயின்ற பல்வேறு மாணவர்கள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தங்களது படிப்பை கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், அவர்கள் தற்போது இந்தியாவில் பயில ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தேசிய தேர்வு முகமை, மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், வேறு காரணங்களால் முன்னதாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.

மேலும், நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி