''பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' எப்போது? ; செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

''பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' எப்போது? ; செங்கோட்டையன் விளக்கம்.


''பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'வழங்குவது குறித்து, வரும், 18க்கு பின், முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு, நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கல்வி மாவட்டம் வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கலெக்டர்கள் கண்காணிப்பில், ஏற்பாடுகளை செய்யும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேர்வு மையமாக செயல்பட உள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி, நான்கைந்து நாட்களில் துவங்க உள்ளது. வரும், 18ல், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், 10ம் வகுப்பு தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்குவது குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

விடைத்தாள் திருத்தம்பவானிசாகரில் நேற்று, செங்கோட்டையன் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், 'ஜாக்டோ - ஜியோ' சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை என்றால்,மற்ற ஆசிரியர்களை கொண்டு, பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வரும், 18 முதல், தொடக்க கல்வி அலுவலர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில், துாய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி