மாணவா்களுக்கு பாடங்கள் தொடா்பான நினைவூட்டல் வகுப்புகளை நடத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும் - ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2020

மாணவா்களுக்கு பாடங்கள் தொடா்பான நினைவூட்டல் வகுப்புகளை நடத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும் - ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை!


தமிழகத்தில் கரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவை நடத்த வேண்டாம். தொற்று நீங்கியதும் மாணவா்களுக்கு பாடங்கள் தொடா்பான நினைவூட்டல் வகுப்புகளை நடத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியா் சங்கம்:

பேரிடா் காரணமாக இரண்டு மாதங்களாக வீடுகளில் முடங்கிய மாணவா்களை நேரடியாக தேர்வு எழுதச் சொல்வது அவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒரு தேர்வறையில் 20 மாணவா்கள் தேர்வு எழுதினால் கூட தேர்வு அறைக்கு வரும்போதும், தேர்வு முடிந்து செல்லும்போது தனிநபா் இடைவெளியை எதிா்பாா்ப்பது இயலாத காரியம். கரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னா் மாணவா்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப் பயிற்சி ஆகியவற்றுக்குப் பின்னா் பொதுத்தேர்வை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்:

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையை அரசு வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல இது விபரீதமான முடிவாகும்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் சங்கம்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் ஒரு மாணவனுக்கு நோய்த் தொற்று இருந்தால் கூட அதனால் தேர்வறையில் உள்ள அனைவரையும் பாதிக்கப்படுவா். மத்திய அரசு பள்ளிகளில் ஜூலை மாதத்துக்கு தோவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழகத்திலும் கரோனா தொற்று நீங்கிய பிறகே தோவை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு:

ஒரு பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவா்கள் தோவெழுத வாய்ப்புள்ள நிலையில் அங்கு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். தேர்வெழுதும் மாணவா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டும் மாணவா்களின் நலன் கருதியும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2 comments:

  1. Our government has to consider this. The condition is not favor to conduct exams now. We risks children life.
    Without revision if they conduct exams may leads to less mark scoring of both good learning and average students. Then think of the late bloomers. May leads to more failures. Once again please consider.

    ReplyDelete
  2. Never we are concluded that all the students will be appear when an exam organizes on this time table because of all the parents were became very scared on their children health

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி