பொதுத் தேர்வுக்கு மாற்றுவழி என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2020

பொதுத் தேர்வுக்கு மாற்றுவழி என்ன?



பேரிடர் காலங்களில் பொதுத்தேர்விற்கு மாற்றாக என்ன செய்யலாம் என கல்வியாளர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.

உமா , கல்வியாளர்

கல்வி முறையில் குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிற துறைகளில் படிக்கும் காலம் வரவேண்டும் . அது தொடர்பான திறன்களை மட்டும் சோதிக்கக்கூடிய சூழல் பள்ளிகளில் வேண்டும் . இதுவொரு கனவுதான் . ஆனால் அதற்கு ஒரு வடிவம் கிடைத்துவிட்டால் மிகப்பெரிய கல்வி வளர்ச்சியையும் தகுதியான மனிதவளத்தையும் நாம் பெறமுடியும் . இன்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் .

நீட் தேர்வு பல குழந்தைகளின் கனவுகளை கிள்ளி எறிந்துவிட்டது . கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவம் . பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 வாங்கிய மாணவியும் , 381 வாங்கிய மாணவனும் 285 மதிப்பெண் வாங்கிய மாணவியும் வருத்தப்பட்டனர் . இவர்களுக்கு மட்டுமல்ல . மற்ற எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்வது ஒரே விஷயம்தான் . பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது ஒரு நுழைவுச் சீட்டுதான் .

தற்போது , ஒருவேளை தேர்ச்சி பெறவில்லை என்றாலும் , வரும் உடனடித் தேர்வில் அதைப் பெற்றுவிடலாம் . ஆகவே குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்தி அழவேண்டாம் என்றேன் . இந்த இடத்தில் இருந்துதான் நாம் தேர்வுக்கான மாற்றுமுறை யோசிக்கவேண்டியிருக்கிறது .

அதாவது CCE தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம் . ஏற்கனவே கடந்த கல்வியாண்டு வரை 9 ஆம் வகுப்பு வரையிலும் , தற்போது 8 ஆம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் இருந்து வரும் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத்தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கு திட்டமிடலாம் .

நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா பேரிடர் நமக்குப் பாடம் கற்பித்துள்ளது .

பரமேஸ்வரி , அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் , வேலூர்

பதினோராம் வகுப்பில் இன்னும் ஓரிரு பாடங்கள் ( ஒரேயொரு நாள் ) நடத்தப் படாமல் உள்ளது . பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவேயில்லை . இப்போது என்ன செய்வது என்பது கேள்வி . வழக்கமான தேர்வுகளின்றி திறமை , ஆர்வம் , கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களை திறனாய்வு செய்ய வேண்டும் என்ற விவாதம் தொடர்கிறது .

ஆனால் தீர்வுகளையோ பரிசோதனை முயற்சிகளையோ அது எட்டவேயில்லை . பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தாமல் தவிர்த்து விடலாம் . பெரும்பாலான மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே தொடருவார்கள் . அவர்களை ஆசிரியர்களுக்குத் தெரியும் எந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம் என்ற அறிவுரையை வழங்க முடியும் .

மாற்றுப் பள்ளிகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்குச் சிறு தேர்வினை வாய்மொழியாகவோ எழுத்துத் தேர்வாகவோ வைத்து அனுமதிக்கலாம் . அதையே தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் முயலலாம் . பதினோராம் வகுப்பு மாணவர்களை அப்படியே 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடலாம் .

இனிவரும் காலத்தில் நாம் மாற்றுக் கல்வியை , தேர்வுமுறைகளைப் பற்றி உறுதியாக யோசிக்கத்தான் வேண்டும் . நம்முடைய பாடப்புத்தகம் அப்படியான ஒரு முறையை நோக்கிய முதல் அடி என்றுதான் சொல்ல வேண்டும் . இதை முன்வைத்து பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையிலும் தேர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றியும் சிந்திக்கவேண்டும் .

பத்மா , அரசு உதவிபெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர் , சென்னை

இன்றைய நிலையில் குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில் தான் இருப்பார்கள் . ஒரு புறம் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் உள்ளன . மேலும் பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன .

ஆசிரியர்களே முன்வந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்து வருவதைப் பார்க்கிறோம் அங்கிருந்து வரும் குழந்தைகளை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் . ஆசிரியர்கள் ஃபோன் செய்து மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக வழிகாட்டி வருகிறோம் .

வொர்க்சீட் அனுப்புகிறோம் . எத்தனை பேர் படிப்பார்கள் என்பதும் மனரீதியாக தயாராக இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது . என்னைக் கேட்டால் , புத்தகங்களில் இருந்து அவர்கள் பதில்களைத் தேடி எழுதும் ஓப்பன் புக் சிஸ்டத்தைப் பற்றி சிந்திக்கலாம் . அடுத்து கொலாபரேஷன் முறை இருக்கிறது . தனியாக ஒரு முறையும் , மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கூட்டாக ஒரு முறையும் தேர்வுகளை நடத்தி , அதில் ஒரு மாணவரின் தனிப்பட்ட கல்வித்திறனை அறியலாம் .

ஆன்லைன் வழியாக சிபிஎஸ்இ - பாடங்கள் நடத்தலையா என்று கேட்கிறார்கள் . எத்தனை மாணவர்களிடம் ஆன்லைன் வசதிகள் இருக்கின்றன ? எங்கள் பள்ளியில் காலை 8 . 30 மணிக்கு சிறப்பு வகுப்பு என்றால் , சில மாணவர்கள் வரமாட்டார்கள் . காலையில் பேப்பர் போட்டுவிட்டு பள்ளிக்கு வரும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் .

கோகுல்நாதன் . அரசு பட்டதாரி ஆங்கில ஆசிரியர் , ஈரோடு

பொதுவாக மொழிப் பாடங்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தி வருகிறோம் . எழுதும் திறனை மட்டுமே பரிசோதிக்கிறோம் . ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது LSRW என்று வகைப்படுத்தப்படும் திறன்கள் அவசியம் . அதாவது ஒரு மாணவரின் கவனித்தல் , பேசுதல் , வாசித்தல் , எழுதுதல் போன்ற நான்கு திறன்களையும் பரிசோதிப் பதாக மொழித் தேர்வுகள் அமையவேண்டும் .

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலும் வீட்டிலும் ஆங்கிலம் பேசக்கூடிய சூழல் வாய்ப்பதில்லை . திரைப்படங்கள் , செய்திகள் , பத்திரிகைகள் வழியாக ஆங்கில மொழி பரிச்சயமாகவேண்டும் . வகுப்புகளில் ஆங்கில ஆசிரியர்கள் 90 சதவீதம் ஆங்கிலத்திலேயே பேசு வது நல்லது .

ஆடியோ வீடியோ போன்ற ஸ்மார்ட் வகுப்பறை , கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மொழிப் பாடங்களை நடத்தலாம் . வெறும் எழுத்துத் தேர்வை மட்டும் வைக்கும் போது , பாடங்களின்மீது புரிதலற்ற மனப்பாடம் மட்டுமே வெளிப்படுகிறது .

ஒரு கேள்வியை மாற்றிக் கேட்டால் பதில் எழுதமுடியாத நிலையில் இருக்கிறார்கள் . சுயமாக சிந்தித்து எழுத முடிவதில்லை . க்ரிட்டிக்கல் திங்கிங் வளரவில்லை . ஒரு கேள்வி ஒரு பதில் என்ற அளவிலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள் . மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்தும் , - கேட்க வைத்தும் , புரிய வைத்தும் எழுதவைத்தும் 5 தயார்ப்படுத்தவேண்டும் .

6 comments:

  1. A certificate of covid 19 academic year 2019 20 with grade A B C can be provided to the present sslc students .If needed the polytechnic institutions and other hr sec schools can conduct an entrance exam and admit the students .It will avoid unnecessary calamities among the public .Kids can be saved from corona .They will be safe

    ReplyDelete
    Replies
    1. Correct.This s my view also.

      Delete
    2. Correct, first Ellam intha Murai fallow pannoma ippa avasara kaalathula itha try panrathula tappu illa

      Delete
  2. திருமதி பரமேஸ்வரி அம்மா அவர்களின் கருத்து தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும பொருத்தமான ஒன்று அவர்களின் கருத்தை பின்பற்றினால் ஆசிரிய, பெற்றோர், மாணவர்களின் மனஉளைச்சலை நிச்சயமாக தவிர்க்க முடியும் ஏன் என்றால் தற்போது பெற்றோர்களிடம் குழந்தைகளின் படிப்பு முக்கியமா உயிர் முக்கியமா என்று கேட்டால் எதைக் கூறுவார்கள் உயிர் தான் முக்கியம் என்பார்கள் எனவே மாணவர்களின் உயிரோடு விளையாடாமல் பரமேஸ்வரி அம்மா அவர்களின் முடிவை நடைமுறைப்படுத்துங்கள் நன்றி

    ReplyDelete
  3. SSLC தேர்வு கொரோனா காரணமாக ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை இம்முறை மூலம் அறிவிக்கலாம்.
    காலாண்டு அரையாண்டு மார்க் படி குழப்பம் வராம மார்க் போட முடியும்
    இந்த முறைப்படி யாருக்கும் மார்க் குறையாமலும் கூடாமலும் மார்க் போடலாம்
    இப்ப காலாண்டு அரையாண்டு சராசரி மார்க் 463 னு வச்சுக்கோங்க
    இப்ப எவ்ளோ மார்க் குறைந்திருக்கோ அதுக்கு percentage கண்டு பிடிக்க வேண்டும்
    500-463=37
    37÷500×100=7.4
    அடுத்து இந்த percentage அ நம்ம எடுத்த மார்க் உடன் சேர்த்து வர மதிப்ப கண்டு பிடிக்கனும் சார்
    Then,7.4÷100×463=34.262
    வர மதிப்ப 2 ஆல் வகுக்கனும்
    34.262÷2=17.131
    இந்த மதிப்ப பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)உடன் கூட்டனும் .
    17.131ஐ தோராயமாக 17 னு எடுத்துக்கலாம்
    Then463+17=480
    இந்த முறைப்படி எந்ந மதிப்பெண் ணுக்கும் மார்க் குறையாமல் ரொம்ப கூடாமலும் போடலாம்
    நீங்க வேணும்னா வேற நம்பர் வச்சு செய்து பாருங்க .
    சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மேல இருக்குற முறைய சுருக்கி ஒரு formula கொண்டு வரலாம்.
    X=பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)
    y=குறைந்த மதிப்பெண் (500-x)
    Formula:
    X + yx ÷1000 (or)

    X(1000+y)÷1000
    தனி தனியா subject mark கண்டுபிடிக்க
    X+xy÷200
    ஏதேனும் தவறு இருப்பின் கூறவும்
    முக்கிய குறிப்பு:தமிழக்த்தில் கொரோனா தீவிரமடைந்து மாணவர்கள் நலன் கருதி தேர்வு ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க இம்முறையினை பயன் படுத்தலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி