அறிவியல் உண்மை - சில சமயங்களில் சந்திரனை மையமாக வைத்து வட்டம் தோன்றுகிறது. இதற்கும் மழை வருவதற்கும் தொடர்பு உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2020

அறிவியல் உண்மை - சில சமயங்களில் சந்திரனை மையமாக வைத்து வட்டம் தோன்றுகிறது. இதற்கும் மழை வருவதற்கும் தொடர்பு உண்டா?


உண்டு! சூரியனிடமிருந்து வரும் ஒளியை சந்திரன் எதிரொளிக்கிறது. சந்திரனிடமிருந்து வரும் ஒளி , காற்று மண்டலத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் சிறுசிறு துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் இரவு வானம் , வெளிச்சமாகத் தோன்றுகிறது.

மேகத்தில் சிறுசிறு துகள்களாக தூசுகளும் புகையும் ( கரி , சாம்பல் ) நீர்த்துளிகளும் இருக்கின்றன. இந்தத் துகள்களின் பருமனுக்கும் ஒளி சிதறடிக்கப்படும் கோணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. பெரிய துகள் குறைந்த கோணத்திலும் சிறிய துகள் அதிகக் கோணத்திலும் ஒளியைச் சிதறடிக்கும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சிதறடிக்கும் துகள்கள் , சந்திரனைச் சுற்றி , ஒரு வட்டத்தில் அமையும்.

வட்டம் சிறியதாகத் தெரிந்தால் பெரிய துகள்கள் இருக்கின்றன என்றும் , வட்டம் பெரியதாக இருந்தால் சிறிய துகள்கள் இருக்கின்றன என்றும் பொருள்.

வட்டம் ஏதும் தெரியவில்லையென்றால்,  மேகத்திலுள்ள துகள்கள் வெவ்வேறான எல்லாவித பருமன்களிலும் இருக்கின்றன எனக் கொள்ளலாம். துகள்களின் பருமனுக்கும் மழை உண்டாவதற்கும் தொடர்பு உண்டு. சிறிய வட்டமாக இருந்தால், கூடிய விரைவில் மழை பெய்யும் எனப் பொருள் கொள்ளலாம். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி