பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது! - kalviseithi

May 6, 2020

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது!


பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் அத்தியாவசியப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் . நிர்வாகப் பணிகளை மேற்கொள் ளக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது .

கரோனா பாதிப்பின் காரண மாக மே 17 - ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் , அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

அதன்படி பள்ளிக்கல்வி மற்றும் அதன் மாவட்ட கல்வி அலுவலகங்க ளில் ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு ஊதியம் வழங்கு தல் , ஓய்வு பெறுபவர்களை விடு வித்தல் , கரோனா தடுப்பு நட வடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரு தல் உட்பட முக்கியமான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் , சில மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களில் தனியார் பள் ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு உள்பட நிர்வாகப் பணிகள் செய்து வருவதாக கல்வித்துறை புகார்கள் வந்தன . இதையடுத்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து இணை இயக்குநர் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கு சில அறி வுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் , ' ஊரடங்கு காலத் தில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை . அதை மீறி ஏதேனும் செயல் பாடுகளுக்கு அனுமதி அளித் தால் , அவை ரத்து செய்யப் பட்டு , சம்மந்தப்பட்ட அதிகா ரிகள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்படும் ' என்று கூறப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி