*சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ₹20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிர்மலா சீதாராமன்
*நிறைய உள்ளூர் பொருட்களை உருவாக்க வேண்டும் என்பதே, சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படை.
*உள்ளூர் நிறுவனங்களை உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே, மோடி அரசின் முக்கிய நோக்கம்.
* 20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்
* பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களளை வலுப்படுத்துவதே நோக்கம்
* உள்நாட்டு பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதே நோக்கம்
* நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன் பெற்று வருகிறார்கள்
* மின்துறை சீர்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது
*5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன.
*லாக்டவுன் காலத்தில் உஜ்வாலா போன்ற பல திட்டங்கள், ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* பொருளாதாரம் , கட்டமைப்பு , தொழில்நுட்பம் , மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்
* பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் , ஏழைகள் பாதித்து இருப்பதை அரசு உணர்ந்துள்ளது*
* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது
* பிரதமர் அறிவித்தது விரிவான தொலைநோக்குத் திட்டம்
* இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படும்
*ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்.
* பல துறை அமைச்சர்கள் & அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனையின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
* நெருக்கடிகளில்தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறோம்
* இந்தியா சுயநலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
* தன்னிறைவு இந்தியா என்பது உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வது அல்ல , தன்னம்பிக்கையை மேலும் அதிகரிப்பது தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கம்
* சிறு குறு தொழில் துறைக்கு 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உதவி அறிவிப்பு , கடனுதவி திட்டம் அக்டோபர் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்
* ரூபாய் 20ஆயிரம் கோடி நிதியில் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறலாம்
* பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு கடன் வழங்க ரூபாய் 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* புதிய கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை
நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி துணைக் கடன் வழங்கப்படும்.
பொதுமுடக்க காலத்தில் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு கடன் வழங்குவதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும்.
நிதிக்குள் நிதி என்ற அடிப்படையல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடனுதவியை 4 ஆண்டுகளுக்கு தவணையாக திரும்ப செலுத்தலாம். முதல் ஆண்டில் தவணை வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
* பிரதமர் அறிவித்த திட்டத்தின் விவரங்களை அடுத்த சில நாட்கள் தொடர்ச்சியாக அறிவிப்போம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி