ஆந்திராவில் பள்ளி திறக்கும்தேதி அறிவிப்பு: தமிழகத்தில் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

ஆந்திராவில் பள்ளி திறக்கும்தேதி அறிவிப்பு: தமிழகத்தில் எப்போது?


ஆந்திராவில் வரும் ஆகஸ்டு 3ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லைஇந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட்3 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்மேலும் பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக மாற்றப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. மாணவர்களின் நலம்விரும்பி செயல்படும் ஆந்திர அரசுக்கு நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி