Breaking News: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2020

Breaking News: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு!


தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3  வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது .

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நாடு முழுவதும் 3வது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடபடும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

20 comments:

  1. ஆசிரியர் மாணவர் நீண்ட இடைவெளி,
    மாணவனுக்கு கொரோனா பயம் மற்றும் பசி.ஒரு வேளை சாப்பாடு எப்படியோ கிடைக்கிறது. புத்தகத்தை தொடுவதில்லை. எப்படித்தான் ஜுன் மாதம் தேர்வு எழுதுவானோ. வேறு வழி தெரியாமல்தான் தேர்வை எழுத வைக்கிறார்களோ. முதல் பருவம்,இரண்டாம் பருவம், I,II திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை வைத்து முடிவு செய்யலாமே.

    ReplyDelete
    Replies
    1. You friest mid term exam mark yenna

      Delete
    2. ரொம்ப பில்டப் பண்ணாதீங்க

      Delete
  2. This was really a good choice for 10th students

    ReplyDelete
  3. This was really a good choice for teneth student

    ReplyDelete
  4. It is correct decision taken by the Tamil Nadu Government to conduct the 10th examination 👌👍

    ReplyDelete
  5. It is acorrect decisions taken by the Tamil Nadu Government to conduct the 20th std examination 👍👌

    ReplyDelete
  6. Give options to students and parents, those who wish to write public exame. or Mark's they scoured in school exams. Willing candidates only permitted to write exams. Through common format to all schools they upload the Mark's. Because 20% of students having no opportunity to revise the subjects, particularly hostel students, in this time difficult to organize them, recall the subjects again, even memories, willing candidates means transportation, arrangements and evaluation process is simple. It will reduce fear and confusion.

    ReplyDelete
  7. Exame is the only solution, Good decision by TN govt. My view willing candidates only permitted to write exam. Others the Mark's provided schools in different exams was taken.

    ReplyDelete
  8. Exam no ... Continue va school ku varum pothu student padichatha marandhuruvanga eppo evlo gap (split) la Enna pannunga childrens if not impossible first & second term wise ah mark podunga .

    ReplyDelete
  9. Last unknown person unakku Vera velaiye illaiya.arivu ketta mundam.

    ReplyDelete
  10. Manavargal padithu kondethan irukkargal whatsapp asiriyar Padikkasolli kodigiranga.neethan padikkama vettiya porampokku comment
    podura.

    ReplyDelete
  11. Science and math exam matum natathuga.

    ReplyDelete
  12. Tamil, English, social consapt only ,it is useful for life.

    ReplyDelete
  13. Private school la exam natatha anumathi tharavum. Maintain gap between students write exam.

    ReplyDelete
  14. Athellam govt pathukiruvanga.neenga arivurai solvathai vittuvittu padigikkira valiapparu mutta mundam.atha appanai ninai padi saniyane.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி