TNPSC தேர்விற்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2020

TNPSC தேர்விற்குத் தயாராவோம்!



வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1935 ஆம் ஆண்டு சட்டப்படி 1937 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தன . சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று சி . ராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது . அவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர் .

1937 ஜூலை முதல் 1939 அக்டோபர் வரை இந்த அமைச்சரவை பதவியில் நீடித்தது . இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது .

இரண்டாம் உலகப் போரின்போது , கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே , காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார் . தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் , மாணவர்கள் , பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

 இது நாடுதழுவிய போராட்டமாக அமைந்தது . பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலை , துறைமுகப் பொறுப்புக் கழகம் , டிராம்வே ஆகியவற்றின் தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர் . வடஆர்க்காடு , மதுரை , கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பரவியது .

ராஜபாளையம் , காரைக்குடி , தேவகோட்டை ஆகிய இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது . சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் , பெண் வீரர்கள் சேர்ந்து விடுதலைக்காக போராடினர் . 1947 ஆகஸ்டு 15 ல் இந்தியா விடுதலையடைந்தபோது , ஒ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானத்தை இயற்றியது .

🌈🌤️Group 2 Model Question with Answer!


✍️Click here to view


🌈🌤️தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்!


✍️Click here to view


🌈🌤️MAY 2020 CURRENT AFFAIRS!


✍️Click here to view


🌈🌤️ஒத்துழையாமை இயக்கம்!


✍️Click here to view

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி