தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 06.07.2020க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு - பள்ளிக்கல்வித்துறை! - kalviseithi

Jun 19, 2020

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 06.07.2020க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு - பள்ளிக்கல்வித்துறை!


புதுடெல்லி , மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 06.07.2020 க்குள் MHRD இணையதளத்தில்

https : /mhrd.gov.in மற்றும் http:/nationalawardstoteachers.mhrd.gov.in 

என்ற முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றி இருக்கவேண்டும் 2019 ஏப்ரல் 30 வரை பணிபுரிந்து இருக்கவேண்டும் ) அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , ஆசிரியர்கள் 06.07.2020 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழ்களில் செய்தி வெளியிட்டு , குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது. மேலும் , இப்பொருள் சார்ந்து தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் , அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி