பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவிருந்த பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை. விரைவில் தேர்வு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசுகையில், "தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு,மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், 11ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
"முடிவு எடுத்தால் உறுதியாக இருக்க வேண்டும்.."
10ம் வகுப்பு தேர்வு ரத்து.. விஜயகாந்த் கடும் கண்டனம்
தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவிருந்த பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி பெறத் தவறி மீண்டும் தேர்வு எழுத காத்திருப்பவர்களுக்கும் மீண்டும் தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் தெரிவிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் போல தனித்தேர்வு மாணவர்கள் 40%மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும்.கொரனா தொற்று இந்த ஆண்டு கடைசி வரை இருக்கலாம்.இதனால் தனித்தேர்வு நடத்தி நோய் தொற்று ஏற்பட வழிவகுக்க.வேண்டாம்.இந்த தேர்வு ரத்து பாரபட்சம் இன்றி அனைவருக்கும் பொருந்த வேண்டும்
ReplyDeletePrivate students mattum pavam yallam all pass nu solluing CM
ReplyDeleteஇப்போது உள்ள சூழ்நிலை யில் தேர்வு நடத்த இயலாது. எனவே தனித்தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் தேர்ச்சி அறிவிக்கலாம். அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் improvement exam எழுத அனுமதிக்கலாம்
ReplyDeleteprivate manavargalukku keelkandavaru therchi alikkalamm Tamil 35%, English-35%.maths-35%,science 20+25=45% social science-35% yena madhippengal koduthu pass seyya vaikkalam
ReplyDeletePrivate studentskku all pass 35 mark alikkalam
ReplyDelete