கர்நாடகத்தில் ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு பற்றி, மாநில அரசுகள், கல்வி நிறுவனங்களுடனும், பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும், அதிலிருந்து கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் மத்திய உள்துறை அமைச்சகம் மே 30-ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, 4 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கும், 8 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கும் ஜூலை 15-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் கால் ஆண்டு, அரையாண்டு தேர்வுகளை பொறுப்புடன் எழுதியிருந்தால் மதிப்பெண்களைப் பற்றி மாணவர்களும் ,பெற்றோர்களும் இந்தச் திடீர் அறிவிப்புகளைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆரம்ப நிலையில் அரசு இந்த முடிவை ஏற்றிருக்கலாம், எடுத்திருக்கலாம். ஆலோசனை யார் சொன்னாலும், பயனறிந்து ஏற்கும் நற்பண்பு நம்மிடம் இல்லாததே பெரும் குறையாகும்.
ReplyDeleteகடைசியில் நிலைமை பெரும் நகைச்சுவை ஆகிவிட்டது..
வல்லுனர்களை, பெற்றோர்களை கருத்து சொல்லக் கேட்ட அரசு ஆசிரியர்களை கலந்து ஆலோசிக்க விரும்பவில்லை.