மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2020

மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்.


தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வலியுறுத்த தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் !!

10வது கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டது.

ஆனாலும் முடிந்துபோன  ஒன்பது வருடங்களுக்கு  மே  மாத சம்பளம் கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரசு கொடுக்க முன்வராதது வேதனையிலும் வேதனை.

இதனால் ஒவ்வொருவரும் ₹58000 இழந்து தவிக்கிறோம்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அவரால் மட்டுமே  சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில  ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

 படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,
ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதிநேர ஆசிரியர்களாக தமிழ்நாடு அரசுப்  பள்ளிகளில் பணிபுரிய  உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான்.

கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று  சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில்  99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியில்  அமர்த்தப்பட்டனர்.

ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான  ஊதியமும் வழங்கப்படவில்லை.

பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும்  சென்று விட்டது.

ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை.

அடுத்த கல்வியாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.
ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில்தான் முதன்முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில்  மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம்  வழங்கப்பட்டது.
இதுவே  சிக்கலுக்கு முதல் காரணம்.

இப்படி முதல் முறை விடுபட்ட  2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம்  இதுவரை கடந்த 9 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை.

இதனால் ஒவ்வொருவருக்கும் 58 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

10வது கல்வி ஆண்டில்  பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு  9 வருடங்களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமா?

பணிநிரந்தரம் கேட்கும் நேரத்தில், தராமல் விடுபட்ட சம்பளத்தை கேட்கும் நிலையில் தள்ளியது வேதனை இல்லையா?.

ஆட்சியாளர்களே  எங்கள் கோரிக்கைகளை, அரசு  சிறுதும்  கவனம் செலுத்துவதில்லை என்ற எங்களின் மனக்குமுறலை எப்போது கவனம் செலுத்துவீர்கள்?.

16549 பகுதிநேர ஆசிரியர்களில்  தற்போதுள்ள 12ஆயிரம் பேருக்கு,  இன்றைய நிலையில் தரப்படும் ₹7700 சம்பளம் வாழ்வாதாரத்தை மீட்குமா.

10 ஆண்டுகளில் எங்களின் நிலையை உயர்த்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது?
 
அரசை நம்பி வந்த எங்களை அனாதை ஆக்கி விடாதீர்கள்.

முதலில் 9 ஆண்டாக தொடர்ந்து மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க முதல்வர் உத்தரவு பிறபிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்  கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்தார் .

தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

9 comments:

  1. முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா?

    ReplyDelete
  2. Sir namba yevlo kathinalum kenjinalum yar kadhulayum kekadhu.namba nelama therija school teachersey nambaluku support ah illa adhu yenaiku marudho anaikudha nambaloda indha nelama marum nambalukaga namba matum kekama korikai vaikama yenaiku adutha regular teachers vaikaragalo anaikudha sir namba nelama maru yedho namba vagara 7700 rs inga neraya peruku 77000 vagaromgara nenapu sir yena education department la adhiga salary vagaradhu nambadha so nambala yarum care pana matraga.

    ReplyDelete
    Replies
    1. Ama sir namba pakara indha velaiku 7700 podhum soilragaley namba seiyara velai yela higher officer's kum theriyum.school teachers yelam namba part time namba seiyara velaiku indha salary podhum nu soilraga apo namba seiyara ivlo velaiku 7700 salary sir sari apo school la adhigam salary vagara yelarum andha alavuku work pandaragala nu avagalukey theriyum sir avagalukula namba salary vagaradhu adhigam dha.school la teacher dha sir namba ana school la Vela seiyara sweeper kuda madhiga matigaraga yena avagala vida namba salary kami sir.nambala pathi yenaiku aduthavaga pesaravara namba nelama maradhu.

      Delete
  3. அய்யா முதல்வர் அவர்களே எங்கள் மீது கருணை காட்டுங்கள்.

    ReplyDelete
  4. Save part time teacher nu oru hashtag create panuga

    ReplyDelete
  5. நான் ஒரு ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் உங்க‌ளின் ப‌ரிதாப‌க‌ர‌மான‌ நிலையை நான் ந‌ன்கு அறிவேன்...உங்களுக்கு என் போன்றோரின் ஆத‌ர‌வு எப்போதும் உண்டு...அர‌சு இவ‌ர்களின் கோரிக்கையை க‌னிவோடு ப‌ரிசீலிக்க‌ வேண்டும்..

    ReplyDelete
  6. மனசாட்சியற்ற அரசு , அமைச்சர் , கல்வி துறை அதிகாரிகள் இருக்கும் வரை பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வும் பி. எட் படித்தவர்களின் வாழ்வும் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வும் கேள்விக்குறிதான்.

    ReplyDelete
  7. senthil kumar sir yennathan neenga evvalavu urakka kaththinaalum azhuthaalum nammai thirumbikkooda parkatha jenmankalukkitta kettathu pothum neenga villamparam paduthikkurathukku neram ethu ella trb special teacher exam yezhuthi 2017 sep kaathukkittu erukkanga avangala Parkathapothu nammai. yeppadi parpanga..

    ReplyDelete
  8. pinamthinnum naaikal vaazhum naatil naan vazha mudiuma....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி