ADW - HM Panel Preparation Reg - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2020

ADW - HM Panel Preparation Reg


ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப 01.03.2017 முதல் 01.03.2020 வரையிலான அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் உதவிக்கல்வி அலுவலர் / பள்ளித்துணை ஆய்வாளர் / நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் பட்டதாரி காப்பாளினி / தமிழாசிரியர்கள் ஆகியோர்களில் தகுதி வாய்ந்த நபர்களை மார்ச் 1 ம் தேதியினை தீர்வு நாளாக ( Crucial Date ) கொண்டு தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு அரசு ஆணை ( நிலை ) எண் .143 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 7 ) துறை , நாள் .17.11.2006 - ன்படி கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் , 1 ) பார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 ( அல்லது ) செயல் அலுவலருக்கான கணக்குத் தேர்வு . 2 ) மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு ( D.O.M ) , உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபடாமல் அனைத்து விவரங்களையும் தனியர்களது கல்விச்சான்று நகல்களுடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பிவைக்கும்படியும் , பட்டதாரி ஆசிரியர்களாக நேரடி நியானம் மூலம் ( TRB ) தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதனதால் அவர்களது ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணை ( தர எண்ணுடன் ) நகலுடன் அனுப்பிவைக்கும்படியும் , பதவி உயர்வு துறப்பு செய்பவர்கள் குறித்த விவரத்தினை உரிய படிவத்தில் பதிவு செய்து 17.06.2020 - க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பிவைக்கும்டியும் மற்றும் தகுதியான நபர் எவரும் இல்லையெனில் “ இன்மை அறிக்கை ” அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் , தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முழுப் பொறுப்பு கரற்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 இணைப்பு : படிவம் - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி