மேல்நிலை பொதுத்தேர்வு - மாணவர்கள் நலன் கருதி தெளிவுரை - தேர்வுத்துறை அறிவிப்பு. - kalviseithi

Jun 7, 2020

மேல்நிலை பொதுத்தேர்வு - மாணவர்கள் நலன் கருதி தெளிவுரை - தேர்வுத்துறை அறிவிப்பு.18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +1 மற்றும் +2 தேர்வுகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மாணவர்களின் நலன் கருதி , பின்வருமாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. 18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +2 தேர்வினை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலும் , +1 Arrear தேர்வினை தாங்கள் பயிலும் பள்ளியிலும் எழுதுதல் வேண்டும் . சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் இது குறித்த தெளிவான அறிவுரைகளை வழங்குவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .

குறிப்பு : மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் ஒன்றாக எழுதும் தேர்வர்களுக்கு மட்டும் இத்தெளிவுரை பொருந்தும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி