ஆன்லைன் வகுப்புகளால் படைப்பாற்றலைக் கடத்த முடியாது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கருத்து! - kalviseithi

Jun 9, 2020

ஆன்லைன் வகுப்புகளால் படைப்பாற்றலைக் கடத்த முடியாது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கருத்து!


ஆன்லைன் வகுப்புகளால் படைப்பாற்றலை அடுத்தவர்களுக்குக் கடத்த முடியாது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவரும் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன்,

''அடிப்படையில் குழந்தைகளுடன் நேரடி மற்றும் மன ரீதியான தொடர்பு என்பது மிகவும் முக்கியமானது. விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் சில முக்கியத் திறன்களை, என்றுமே ஆன்லைன் கற்றல் மூலம் கடத்த முடியாது. முகத்துக்கு முன்பான தொடுதல், யோசனைகளை, எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவை மரபுவழியில் மட்டுமே சாத்தியம்.

குழந்தைகளுக்கு 8 வயது வரை மூளை வளர்ச்சி தொடர்ச்சியான செயல்பாடாக இருக்கும். முழுமையான உரையாடல்களுடன் அவர்களின் மூளையை முறையாக நீங்கள் தூண்டிவிடாத பட்சத்தில், குழந்தைகளின் தலைசிறந்த செயல்திறனைப் பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்.

இதுபோன்ற விவகாரங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். உயர் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளைக் கற்பது அந்த நேரத்தின் தீர்வாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் ஆரம்பக்கட்டக் கல்வியில் இது சிறப்பானதாக இருக்காது.

குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வி முறை உள்ளிட்ட அனைத்து முறைமைகளையும் அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டியது அவசியம். ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியவை'' என்றார் கஸ்தூரிரங்கன்.

1 comment:

  1. கொரோனா காலத்திலும் தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கான ஒரு வழி தான் ஆன்லைன் வகுப்புகள். எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் LKG வகுப்புக்கு கூட ஆன்லைன் வகுப்பு எடுக்கிறார்கள் என்றால் அவர்களின் பகற்கொள்ளையை அறிந்துகொள்ளுங்கள். LKG வகுப்பு பிள்ளைகளுக்கு ஆன்லைனில் என்ன புரியும் அல்லது தெரியும்…
    நம் தமிழ்நாட்டு கல்வி முறையில் என்று தான் மாற்றம் வருமோ…???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி