மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Jun 13, 2020

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு.


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: |

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் , பிளஸ் 1 வகுப்பு விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலாண்டு , அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணும் , வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் , தனியார் , மெட்ரிக் , ஆங்கிலோ இந்தியன் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் தங்களது பள்ளியில் படித்த 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் கடந்த மார்ச் 21 ம் தேதி வரை முழுமையான ஆவணங்கள் இருக்கிறதா ? என்பதை சரிபார்க்க வேண்டும்.

மாணவர்கள் வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பு படித்து வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் , பாடத் தேர்வுகளை எழுத இருந்த மாணவர்களின் வருகைப்பதிவேடு பிப்ரவரி 29 ம் தேதி வரை முழுமையாக இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். இதை ஒப்படைக்கும் போது மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.வருகைப்ப திவேட்டின் கடைசி பக்கத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கையொப்பமிட வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் வருகைப்பதிவேட்டை , மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி வாரியாக முத்திரையிடப்பட்ட உறையில் , தனித்தனியாக பாதுகாக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு இ - மெயிலில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு எழுத இருந்த மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் , விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து விவரங்கள் கேட்கும்பட்சத்தில் உடனடியாக அதை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

8 comments:

 1. விடைத்தாள் ஒப்படைக்க சொல்ல வாய்ப்பு இருக்கிறதா

  ReplyDelete
 2. Answer paper miss ana enna panrathu

  ReplyDelete
  Replies
  1. பள்ளியை மூடி விட வேண்டிய துதான். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

   Delete
 3. How do you miss this year half yearly and quarterly exam answer papers?

  ReplyDelete
  Replies
  1. School LA vachu iruthen.ippo kaanom.miss ayuduchu sir.

   Delete
 4. விடை தாள் மாணவர்களிடம் உள்ளது. திரும்ப பெறவில்லை. என்ன செய்வது.

  ReplyDelete
 5. ஐஸ் வாங்கி இருந்தா?!
  எடைக்கு போட்டு இருந்தா?!

  ReplyDelete
 6. நன்றாக படிக்கும் சில மாணவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது இரண்டுமோ அல்லது ஏதாவது ஓரிரு பாடங்களோ எழுதவில்லை என்றால் என்ன செய்வது?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி