
திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் கல்வி மாவட்டம் , வேடசந்தூர் ஒன்றியம் , எரியோடு , சாய்ராம் நகர் திரு.பி.பிரடெரிக் ஏஞ்சல்ஸ் என்பாரிடமிருந்து மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு எண் :
1079718/2020 நாள் 30.03.2020
மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண நிதிக்காக தன்னுடைய ஒரு நாள் ஊதியம் வழங்கியுள்ளதாகவும் , தன்னுடைய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி இருப்பில் உள்ள தொகையில் ரூ .10000 / - ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) எடுத்துக் கொள்வதோடு , தனது CPS NO : 705294 / PUPS EDN இல் , 2020 ஏப்ரல் , மே , ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்குரிய தன்னுடைய பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்புத் தொகையில் சுமார் ரூ.36,000 / ( ரூபாய் முப்பத்தாறாயிரம் மட்டும் ) கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இப்புகார் மனு தொடர்பாக மனுவை ஆய்வு செய்ததில் , அரசாணையின்படி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் மட்டுமே மேற்படி நிவாரண நிதி பிடித்தம் செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளதால் , மனுதாரரின் கோரிக்கை சார்ந்து பரிசீலிக்க இயலவில்லை என்ற விவரம் மனுதாரருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Just right
ReplyDeleteபோராளி பிரடெரிக் அண்ணனுக்கு வாழ்த்துகள்...
ReplyDelete