படத்தில் இருப்பது தடகள வீரர் சாந்தி.2006ல்,தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக, தமிழக அரசின் சார்பில் 15 லெட்சம் ரூபாய் பணமும், 1 லெட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது ; வழங்கியவர் முதல்வர் கலைஞர்.
1 லெட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சி வழங்கிட காரணம் என்னவெனில், சாந்தி வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. எனவே, தனது முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் அதே மாதிரியான தொலைக்காட்சியை பரிசளிதார் கலைஞர்.
இந்த பரிசு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான், பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று,அவரின் பதக்கம் பறிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கலைஞர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. வீரர் சாந்தியிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார் " நீ, பெண்ணாக உணருகிறாயா" என்று. "ஆம்" என்று சாந்தி பதிலளிக்கவே " அப்படியானால், இந்த 15 லெட்சம் பரிசைப் பெற, முழு தகுதி உனக்கு உண்டு" என்று கூறி காசோலையை கொடுத்தார்.
அப்போதும் அதிகாரிகள் ஏதோ சொல்லப்போக, "ஓடியது இந்தக் கால்கள் தானே"என்று சொல்லி வாயடைத்து இருக்கிறார் கலைஞர்.
உண்மையில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒன்று. எளிய மக்களின் மீது தீராத அன்பு இருக்கும் ஒரு தலைவரால் மட்டுமே இதை செய்ய முடியும்.
ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்றியதும் கலைஞர் கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பிறந்ததின சிறப்புச் செய்தி.
The Great CM happy birthday.
ReplyDeleteGreat
ReplyDeleteநினைவில் கொள்ள வேண்டியவர்.
ReplyDeleteIppozhuthan theriyum niraya perukku. I miss kalaignar
ReplyDelete