கொரோனா தீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பேட்டி - kalviseithi

Jun 13, 2020

கொரோனா தீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பேட்டி


மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனாதீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என முதல் வர் எடப்பாடி பழனிசாமிகூறினார். சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையில் இருந்து நேற்று , டெல்டா பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்டபள்ளியில் இவ்வளவுகட்டணம் , கட்டச்சொல் கிறார்கள் என பெற்றோர் புகார் கொடுத்தால் தான் , அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். முதலமைச்சராகிய நானே தெரிவிக்கிறேன் . பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் , அந்தப் பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளிகளை திறப்பது குறித்து , மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறது.

அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப் பட்ட பிறகு , பள்ளிகள் படிப்படி யாக திறக்கப்படும். கொரோனா தொற்று இருக்கும்போது , இதை அறிவித்தால் பிரச்னைகள் வரும். எனவே , தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பின் , கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி