காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமா? ‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம் - kalviseithi

Jun 11, 2020

காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமா? ‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம்


காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவதால் மதிப்பெண் குறையும்‘ என மாணவர்கள் ஆதங்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தவேண்டாம் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கு பதிலாக மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் கூறினார்.பொதுத்தேர்வு அறிவிப்புக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்தாலும், அதற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து தற்போது மேலோங்குகிறது.

காரணம், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டதால், புத்தகங்கள் அச்சிடும் பணிகளில் சற்று தாமதம் ஆனது. இதனால் அரசு பள்ளிகளை தவிர, தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள் தாமதமாகவே கிடைத்தன.

புத்தகங்கள் கிடைக்கும் வரை வழிகாட்டு புத்தகத்தை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்ததாகவும், அரையாண்டு தேர்வுக்கு பிறகு தான் பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு முழுமையாக கிடைத்ததாகவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் புதிய பாடத்திட்டம் என்பதால் அதனை புரிந்து படிக்கவும் மாணவர்களுக்கு சற்று நாட்கள் பிடித்தது. இதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் குறைவான மதிப்பெண் தான் மாணவர்கள் பலர் எடுத்து இருக்கின்றனர்.

ஆகவே, அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்கினால் பள்ளி மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும், மதிப்பெண் பெருமளவில் குறையும் என்றும் பேசப்படுகிறது. இதற்கு அரசு தான் தீர்வு சொல்லவேண்டும்என்று ஆசிரியர்களும், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

6 comments:

 1. Dai govt app yenna than pannanum ...yellarukum 490 mark mark kudukanuma

  ReplyDelete
 2. Instead of taking average, the highest mark between quarterly and half yearly can be good.

  ReplyDelete
 3. முன்னால போனா கடிக்குது. பின்னால வந்த உதைக்குது...அப்படிதான் இருக்கு இந்த பெற்றோர் , சில ஆசிரியர்களின் நிலைப்பாடு. தேர்வு வைத்தால் வேண்டாம் என்று நீதிமன்றம் செல்வது... தேர்வை ரத்து செய்தால் ...மார்க் குறையும் என்பது... அரசு யார் சொல்வதைத்தான் கேட்கும். அரசு என்ன செய்யனும்னு நீங்க முடிவு எடுக்காதீர்கள்.

  ReplyDelete
 4. Grade ABC போட்டால் no problem.80-100A,60-80B,35-60C.

  ReplyDelete
 5. இந்த பிரச்சனை தீர வழி இல்லை அனைவரையும் திருப்தி படுத்த இயலாது
  காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் மதிப்பெண்களில்
  Best three எடுத்து கொண்டு Average. 80 convert செய்து +வருகை பதிவிற்கண 20 மதிப்பெணை கூட்டி Grade A1 91-100,A2 81-90,B1 71-80, B2 61-70,C1 51-60,C2 41-50,D 33-40 ஒரளவு திருப்தி படுத்தலாம்

  ReplyDelete
 6. யாரும் யாரையும் திருப்தி படுத்த வேண்டாம் பொதுத்தேர்வு வைப்பது ஒன்றே தீர்வு ஆல் பாஸ் ஓகே அது படிக்காத பிள்ளைகளுக்கு
  மார்க் வேண்டும் என்றால் வந்து எக்ஸ்ஸாம் எழுதட்டும் இதனால் எல்லோரும் பாதிக்கின்றனர் படிக்காத ADMK

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி