ஆசிரியர்களுக்கு இதற்கெல்லாமா தமிழகத்தில் தடை? - kalviseithi

Jun 14, 2020

ஆசிரியர்களுக்கு இதற்கெல்லாமா தமிழகத்தில் தடை?


'முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, பேட்டி கொடுக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமாரும், தனியாக பேட்டி அளிப்பதில்லை.

இந்நிலையில், அமைச்சரின் சொந்த மாவட்டமான, ஈரோடு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில், தன்னிச்சையாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'ஆசிரியர்கள், தங்களின் சங்கங்கள் சார்ந்து, அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதால், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அதை தடுக்கும் வகையில், இந்த அறிவிப்பு உள்ளது' என, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

20 comments:

 1. இந்த சங்கங்கள் யாரு தெரியுதா??? பாடமே எடுக்காம ரூல்ஸ் பேசிகிட்டு கவர்மென்ட் ட ஏமாத்தி சம்பளம் வாங்குற யூஸ்லெஸ் தத்திகள் தான்....

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகாேதரா நானும் அரசுப்பள்ளி ஆசிரியர்தான்

   Delete
  2. Aasiriyarkal meethu unakku enda poramai Nilava

   Delete
  3. பொறாமையா... டேய் நானும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான்..

   Delete
 2. நிலவன் தாங்கள்தான் எல்லா சங்கத்தாரையும் பின்னேசென்று உளவு பார்கிறீர்களோ..... இது ஜனநாயகநாடு..... அது கல்வி அலுவலருக்கு தெரியவில்லை போல.... பணிசெய்யா ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்... அதைவிடுத்து இப்படி பொத்தாம்பொதுவாக இழிவாக சொல்வது தங்களுக்குதான் இழிவு...

  ReplyDelete
  Replies
  1. மரியராஜ் சார்.. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா??

   கழிவறை வசதி உள்ளதா??

   குடிநீர் வசதி உள்ளதா??

   ஆனால் இதையெல்லாம் செய்ததாக கேஷ்புக், தீர்மானப் பதிவேடு, வவுச்சர் புக் என அனைத்திலும் உள்ளதே.. இதையெல்லாம் கண்டித்து உங்கள் சங்கம் குரல் கொடுத்துள்ளதா???

   ஆசிரியர் நலனை மட்டுமே யோசித்த சங்கங்கள் மாணவர் நலனுக்காகவும் பள்ளி நலனுக்காகவும் ஏன் வலுவாக குரல் எழுப்புவதில்லை...

   போங்க சார் நீங்களும் உங்க சங்கமும்.... பெண்பிள்ளைகள் தற்காப்பு கலைக்காக ஒதுக்கப்படும் 9000 ரூபாயை கூட பல பணப்பிசாசுகள் ஆட்டய போடுதாம்...

   Delete
  2. Nilavan... தங்கள் பள்ளி அப்படி எனில்.... நீங்கள் போராடுங்கள்... அதை விடுத்து..... எல்லாரையும் பழிப்பது சரியல்லReply

   Delete
 3. தனித்தேர்வர்கள் நிலை என்ன

  ReplyDelete
 4. குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கும்போதே மத்திய அரசின் முடிவுப்படி பல்வேறு பணியிடங்கள் குறைக்கப்பட்டு நிர்வாகங்களில் பல்வேறு வேலைப்பளு கூடி வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. டி.டி.எட் படித்தவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. டெட் தேர்ச்சி பெற்றும் (கடின உழைப்பில்) வேலை இல்லை என்னும் நிலை உருவாகி 2013 -ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் காலாவதியாகும் நிலை உருவாகிவிட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் 7700 சம்பளத்தில் பரிதாபமான நிலையில் உள்ளார்கள்(மே மாத சம்பளமும் இன்றி). இதை வெளிக்கொண்டு வந்தால் தான் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட விஷயங்களை யார் வெளியில் கொண்டு வருவது? ஆசிரியர் சங்கம் சார்பாக இந்த விஷயங்களையெல்லாம் வெளியில் கொண்டு வருகிறார்கள். அதற்கும் தடைவிதித்தால் படித்துவிட்டு கஷ்டப்படுவோர்க்கு யார் குரல் கொடுப்பது இப்போதுள்ள வேலைவாய்ப்பற்ற சூழ்நிலையில்???

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்

   Delete
  2. Yarum kural koduka veandam aya senkoatayan aya parthukuvaru

   Delete
 5. Corona பாதிப்பு காரணமாக மக்கள் இனி யாருக்கும் ஓட்டு போடுவதை தவிர்த்து தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே முன் வந்து செய்துகொள்ளும் நிலமை வரும் போதுதான் தெரியும் அரசியலின் வீழ்ச்சி மக்களின் புரட்சி...

  ReplyDelete
 6. சங்கங்களின் வரலாறு தெரிந்த பிறகு பேசுக

  ReplyDelete
 7. தங்கள் பள்ளி அப்படி எனில்.... நீங்கள் ோராடுங்கள்... அதை விடுத்து..... எல்லாரையும் பழிப்பது சரியல்ல

  ReplyDelete
 8. அவரவர் தத்தமது வேலைகளை செய்தாலே சமூகத்தில் பிரச்னையில்லை. ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அனைவருக்கும் சிறுமையே. இதை நாம் கண்டும் காணாமல் விட்டால்,நாமும் ஒரு நாள் காணாமல் போக வேண்டியதுதான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி