ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2020

ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிக்கு அனைத்துத் துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு 50 வயதுக்குக் குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தைப் பெற்று பணியமர்த்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஆசிரியர்களின் விருப்பத்தைப் பெறாமல் அவர்களைக் கரோனா பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ''சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ஷிப்ட் முறையில் கரோனா கட்டுப்பாட்டு மையப் பணிகளுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமலும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை.

கட்டுப்பாட்டு மையங்களில் தனிமனித விலகல் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், வீடுகளில் இருந்து கவுன்சலிங் வழங்கத் தயாராக உள்ளனர்.

தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

6 comments:

  1. ஏன் ஆசிரியர் பெரிய லார்டா... வேலை செய்ய மாட்டானுங்களா...

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு
      உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,பாதுகாப்பான‌ த‌ங்கும் இட‌ம்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, க‌ள‌ப் ப‌ணியாள‌ர் த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் அவ‌ரின் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி, வ‌ய‌தான‌ ம‌ற்றும் உட‌ல்ந‌ல‌க் குறைபாடு உள்ள‌வ‌ர்க‌ளைத் த‌விர்த்து,ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....

      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அவ‌ர்க‌ள் எதுவும் ப‌திவிட‌வில்லை எனில் இத‌னை ஏற்றுக் கொண்டார்க‌ள் என்றே பொருள்...

      த‌ய‌வு செய்து அர‌சு ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் மீதான‌ உங்க‌ளின் த‌வ‌றான‌ எண்ண‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்..

      Delete
  2. மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் தூய்மை பணியாளர்கள் வருவாய் துறையினர்கள் இவர்கள் எல்லாம் களப்பணி ஆற்றும் போது இந்த ஆசிரியர்கள் சமூகத்தினர் மட்டும் ஏன் முன்வர தயங்குகிறார்கள். உங்கள் உயிர் மட்டும் அவ்வளவு விலை மதிப்பானதா... இதற்கும் மற்றவர்கள் எல்லாம் உங்களை விட குறைவான சம்பளம் தான் பெறுகிறார்கள். பள்ளியில் OB அடிப்பது போதாதா...

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு
      உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,பாதுகாப்பான‌ த‌ங்கும் இட‌ம்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, க‌ள‌ப் ப‌ணியாள‌ர் த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் அவ‌ரின் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி, வ‌ய‌தான‌ ம‌ற்றும் உட‌ல்ந‌ல‌க் குறைபாடு உள்ள‌வ‌ர்க‌ளைத் த‌விர்த்து,ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....

      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அவ‌ர்க‌ள் எதுவும் ப‌திவிட‌வில்லை எனில் இத‌னை ஏற்றுக் கொண்டார்க‌ள் என்றே பொருள்...

      த‌ய‌வு செய்து அர‌சு ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் மீதான‌ உங்க‌ளின் த‌வ‌றான‌ எண்ண‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்..

      Delete
    2. எப்படி வேலை செய்யாமலே மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறுவது போலவா...

      Delete
  3. Part-time teacher kodunga naga parthukarom..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி