அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கணித பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2020

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கணித பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, முதுநிலை கணிதம் குறித்து, ஆன்லைனில் இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை கணித ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியாக, ஆன்லைனில், 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் என்ற தலைப்பில், இந்த பயிற்சியை, ஆசிரியர்கள் பெறலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கணிதத்தில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு, இந்த பயிற்சி உதவும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தினமும் காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, நேரலை பயிற்சியும், பின், மாலை, 5:00 மணி வரை, ஆன்லைன் வழி பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற விரும்பும் ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி