பள்ளிகள் திறப்பதற்கான பொது விதிமுறைகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசனை - kalviseithi

Jun 8, 2020

பள்ளிகள் திறப்பதற்கான பொது விதிமுறைகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசனை


கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

தற்போது கரோனாவை சமாளித்தபடி பழைய நிலைக்கு நாடு திரும்ப வேண்டிய நெருக்கடி உருவாகி வருகிறது. இதனால், கல்வி நிலையங்களும் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பொது விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.இதில், குறிப்பாக கல்வியின் செயல்பாடுகள் அனைத்திலும் சமூக இடைவெளியை கடைப் பிடிப்பது அவசியம் என வலி யுறுத்தப்பட உள்ளது. கல்லூரி, பள்ளிகளின் பேருந்துகள், கார், வேன்களில் உள்ள இருக்கைகளில் பாதி எண்ணிக்கையில் மட்டும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.கல்வி நிலையங்களில் இந்த வாகனங்களுக்காகத் தனி நுழைவு வாயில் அமைக்கப்படவும் அறி வுறுத்தப்பட உள்ளது. இதனால்,மாணவ, மாணவிகள் கல்வி நிலை யங்கள் முடிந்தவுடன் சமூக விலகலுடன் வெளியேறும் வகை யில் செயல்முறை அமைக்கப் படும்.

இதேபோல, வகுப்பறைகளின் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது இரண்டு பகுதிகளாக அவற்றை பிரித்து பாடம் நடத்தவும் உத்தரவிடும் வாய்ப்புகள் உள்ளன.ஏனெனில், பல்வேறு வெளிநாடு களில் கரோனா அச்சுறுத்தல் அடங் கிய பின் பள்ளிகள் திறக்கப்பட் டாலும், குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அடுத்த சில நாட்களில் மூடவேண்டிய நிலைக்கு உள்ளானது. எனவே, கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மிகுந்த கவ னம் செலுத்த முடிவு செய்து, அதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி வருகிறது.இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகவட்டாரம் கூறும்போது, "பெரும் பாலான கல்வி நிலையங்களில் பேருந்து பயணம் வேண்டாம் என பெற்றோர்கள் மறுத்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும், சிறிய வாகனங்களில் அனுப்பப்படும் போதும் சமூக இடைவெளி அவசியம் என நிபந்தனை விதிக்க உள்ளோம். உள்ளே நுழைந்தது முதல் வெளியேறுவது வரை அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது கல்வி நிலையங்களின் பொறுப்பாக இருக்கும்" என்றனர்.இதில், எந்தவிதமான சலுகை களும் அளிக்கப்படக் கூடாது என கல்வி நிலையங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதிக்க உள்ளது. இந்த பொது விதிமுறைகள் உரு வாக்கப்பட்ட பின் அனைத்து கல்வி நிலையங்களும் ஒன்றாக திறக்க அனுமதிக்கப்படாது.

மாறாக, ஒன்றன் பின் ஒன்று என பல கட்டங்களாக திறந்து அதன் செயல்பாடுகள் அறியப்படும். இதன் பின்னரே மற்ற கல்வி நிலை யங்கள் திறப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி