Flash News : 10,11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து - முதல்வரின் செய்திக்குறிப்பு ( Pdf ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2020

Flash News : 10,11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து - முதல்வரின் செய்திக்குறிப்பு ( Pdf )



10th,11th Exam Cancel - CM Press News ( pdf) - Download here

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன [ வேதியியல் , கணக்கு பதிவியல் புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி - கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ] ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து , அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு , மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் , தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது . தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் , சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நோய் தொற்று வல்லுநர்கள் , நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர் . எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும் , நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க , வருகின்ற 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் , 11 ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே , இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் . 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில் , ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

18 comments:

  1. வெளியூரில் இருக்கும் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆம். சென்று கையொப்பமிட வேண்டும்..

      Delete
    2. Yesterday only we signed

      Delete
  2. Thaliva neega nalla irruka veandum ( edapdi ayya, senkoatayan aya) ippa pesuga da parkalam. thalivarku exam vida students uiru tha mukiyam...cm valgha .... senkoatayan aya valgha

    ReplyDelete
    Replies
    1. Dai ne paithiyama da nee. aramental idhuku munadi vara aya exam vaiparu nailavaru govt yedukara mudivu super nu pesina ipo yenada ipadi pesra aramental

      Delete
    2. Lusu punadai kudhi..enga thalivar tha ippiyum solli irrukaru edhuku eduthalum kutram kandupidika kuadadhu....thalivar edapadi aya senkoatayan aya valgha

      Delete
    3. இவ‌ன் காசுக்காக‌ டேஸ் தின்ப‌வ‌ன்..அது வேற‌ வாய்..இது நாற‌ வாய்..

      Delete
    4. இவ‌ன் காசுக்காக‌ டேஸ் தின்ப‌வ‌ன்..அது வேற‌ வாய்..இது நாற‌ வாய்..

      Delete
  3. NEET தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்
    அடிப்படையில் சேர்க்கை செய்ய வேண்டும்

    ReplyDelete
  4. Private jail studentsம் ஆல் பாவா தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  5. Scribe and மாற்று திறனாளி studentsக்கு ஏதாவது மார்க் extra உண்டா?

    ReplyDelete
  6. தனித்தேர்வர்களின் நிலை பற்றி சொல்லுங்கள்

    ReplyDelete
  7. Sir private candidate result yepdi.

    ReplyDelete
  8. Sir private candidate nangalum tutorial muliyamaga padikurom plus science public practical class 5 week attend panni exam lam yeluthi irukom so engalayum all pass panunga sir please (A) grade (B) grade pola engalkum (C) grade yenra level la pass panunga sir muthalvar yedapadi aiyya please..

    ReplyDelete
  9. Engala pola private candidate pasangalum yena nadakumo yethuku nadakumo yenra mana uolaichal irukom sir please request to all students..

    ReplyDelete
  10. 16வயது உட்பட்ட தனித்தேர்வு மாணவர்கள் அதிகம் உள்ளனர் பாவம் அவர்களையும் தேர்ச்சி என அறிவிக்கலாம் ஏனெனில் தேர்வு காலம் முடிந்து விட்டது கொரனா தொற்று அதிகமாகிவிட்டது.40%மதிப்பெண் தேர்ச்சி என அறிவிக்கலாம். ஓரு மாணவர்க்கு கொரனா தொற்று ஏற்பட்டால் அது இந்த தேர்வு துறை தான் காரணம் என பெற்றோர் எதிர்க்க கூடும்.தீர்ப்பு எல்லோருக்கும் ஓன்றாக இருக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி