Flash News : 10ம் வகுப்பு தேர்வு -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2020

Flash News : 10ம் வகுப்பு தேர்வு -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை!


10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கும் சேர்த்து இருத்தல் நலம்.... அவற்றில் 6 முதல் 12 வரை படித்திருந்தால் போதும்

    ReplyDelete
  2. தள்ளி வைப்பதை விட இரத்து செய்வதே சிறந்தது.

    ReplyDelete
  3. Sonna thethiyil vaigada samigala.

    ReplyDelete
  4. தேர்வை வைத்து கொரோனாவை அதிகபடுத்த வேண்டாம். வேறு மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு தொற்று இருக்காது என்பது எப்படி கூற முடியும்.தேர்வை தவிர்பதே நல்லது.

    ReplyDelete
  5. நிலையில்லாத அறிவிப்பு கல ஆனால் எமது மாணவர்கள் கொரோணாவினை விட மனதளவில் சோர்ந்து போய் விட்டனர்.தேர்வினை பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டனர்.அரசின் அறிவிப்புகளிலும் நம்பிக்கை சிறந்து விட்டனர்.

    ReplyDelete
  6. Let all the students study in the same class for this year also. Exams may be conducted in 2021. Entire world has affected by this so no other go.

    ReplyDelete
  7. Thalivaru sengotiyan aya soluvadhai ketu nadapom...ungaluku nu inga oru kootam irruku aya....aya valiyil endrum

    ReplyDelete
  8. தேர்வுக்கு என்ன இவ்வளவு அவசரம். எதற்க்காக மாணவர்களின் உயிரை வைத்து விளையாடுகிறார்கள்.தேர்வை இரத்து செய்ய வேண்டும் மாணவர்களின் உயிரைக்காப்பாற்ற வேண்டும்.இந்த நிலைமையில் தேர்வு நடத்தினால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும்.தயவு கூர்ந்து மாணவர்களை இந்த கொடிய நோயிர்க்கு பலியாக்காதீர்கள்.

    ReplyDelete
  9. Better coduct 10 examination ,then only students will be relaxed

    ReplyDelete
  10. நான் 10ஆம் படிக்கும் மாணவி ,எனது உயிரைவிட மேலானது எனது கல்வி.அதனால் எனக்கு தேர்வும் மதிப்பெண்ணும் அவசியம் .அறிவித்த தேதியில் தேர்வு வைக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி