10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2020

10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்கள்!!



10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங் களையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழி யாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை விவரம் :

பொதுத்தேர்வை நல்முறையில் நடத்த பள்ளி தலைமையாசிரியர் கள் , முதல்வர்கள் அரசின் அறிவுர கைளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . அதன்படி பள்ளி வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் .

இதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராக வைத்திருக்க வேண்டும் . அதனு டன் கூடுதல் விடைத்தாள்கள் மற் றும் சிறப்பு உறைகளை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண் டும் .

அதேபோல் , மாணவர்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வு மையத்தின் பெயரும் , தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்றிருக்கும் .

எனவே , மாணவர்களுக்கு தேர்வு நடை பெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண் டும் . வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்ற மாணவர்கள் சொந்த இருப்பிடத் துக்கு திரும்பிவிட்டதை உறுதி செய்ய வேண்டும் .

அதேபோல் , மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ( ஹால் டிக்கெட் ) வழங்கும்போதே முகக் கவசமும் தரவேண்டும் . 10 - ம் வகுப்பு மாணவருக்கு 3 முகக் கவசமும் ,
பிளஸ் 1 , பிளஸ் 2 மாண வருக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி