TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம்! - kalviseithi

Jun 2, 2020

TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம்!1. ஆண்டன் வான் லூவன் ஹுக் என்ற நுண்ணுயிரியலாளர் முதன் முதலில் தன்னுடைய நுண்ணோக்கியை வடிவமைத்தார் .

2. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ.வே வீராய்டு என அழைக்கப்படுகிறது . இவைகள் தாவர செல்களில் காணப்பட்டு அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன .

3. கிரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் நரம்பு மண்டலத்தை சிதைக்கும் ஒரு நோய் ஆகும் . இந்த நோயின் விளைவாக செரிப்ரல் கார்டெக்ஸ்
( மூளையின் மேற்பட்டை ) என்ற பகுதி பாதிக்கப்படுகிறது . முற்றிக்கொண்டே செல்லுகிற மூளைக்கோளாறு நோயான நினைவை இழுத்தல் , நடத்தையில் மாற்றங்கள் , குறைவுபட்ட ஒருங்கிணைப்பு மற்றும் பார்வையில் இடையூறு ஏற்படல் போன்ற பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன

4. உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7

5. உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25

6. உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

7 . உலக காச நோய் எதிர்ப்பு தினம் - மார்ச் 24

8. இராபர்ட் காச் ( பாக்டீரியாவியலின் தந்தை ) - இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார் . 1876 ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார் . இந்தநோயால் பாதிக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் இரத்த நாளங்களில் கோல் வடிவ பாக்டிரியாக்கள் காணப்பட்டதைக் கண்டறிந்தார் . செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்கிறபோது இவ்வகைப் பாக்டீரியங்கள் அவைகளின் உடலுக்குள் செல்கின்றன என்ற முடிவுக்கு அவர் வந்தார் .

9. காசநோயைப் பரப்பும் மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாவானது ராபர்ட் கோச் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

10. மாண்டாக்ஸ் சோதனையானது காசநோயைக் கண்டறிவதற்கான ஒரு குறிப்பிட்ட டியூபர்குளின் தோல் சோதனையாகும் .

11. தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டமானது 1962 ம் ஆண்டு துவங்கப்பட்டது .

12. காலரா நோய் விஃப்ரியோ காலரே என்ற உயிரியால் ஏற்படுகிறது என்பதை முதன் முதலில் வெளியிட்டவர் ராபர்ட் காச் ஆவார் . இந்த பாக்டீரியத்தால் உருவாக்கப்பட்ட காலோரஜன் என்ற தீங்கிழைக்கும் நச்சுப் பொருள் இந்நோயை ஏற்படுத்துகிறது .

13. போலியோ வைரஸானது என்டிரோ வைரஸ் எனவும் அழைக்கப்படுகிறது . இது உணவுக்குழாய் சம்பத்தப்பட்ட இடங்களில் ஏற்படும் நோய்த்தொற்றாகும் . 3 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை இது அதிகமாகப் பாதிக்கிறது .

14. இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வானது தொடங்கப்பட்டது .

15. 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒருவரும் இந்தியாவில் இல்லை என அறவிக்கப்பட்டுள்ளது .
• மூன்று வருடங்களில் ஒரு நாட்டிலுள்ள எந்த ஒரு நபரும் போலியோவால் பாதிக்கப்படவில்லையெனில் உலக சுகாதார நிறுவனம் போலியோ இல்லாத நாடு என அந்நாட்டை அறிவிக்கும் . எனவே , இந்தியாவானது 2014 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி அந்த சிறந்த நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது .

16. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது . இந்நோய் பல மில்லியன் மக்களைத் தாக்கியது.எனவே ஜூன் 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் என அறிவித்தது .
• 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 31,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 1900 பேர் இறந்துபோனதாக தகவல்கள் உள்ளன .
• 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாலத்தீவில் இந்நோய் சிறிய அளவில் பரவ ஆரம்பித்தது . இந்த பன்றிக்காய்ச்சல் நோயானது உலகில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது . உலக சுகாதார நிறுவனமானது இந்த நோய்க்கு பெரும் கொள்ளை நோயின் அளவில் 5 ஆம் அளவு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது . இந்த அளவானது மனிதர்களிடமிருந்து பிற மனிதனுக்கு நேரடியாக பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதைக் காட்டுகின்றது .

17. பறவை இன்ஃபுளுயன்சா வைரஸ் ஏ
( எச் 5 என் 1 ) 1996 ஆம் ஆண்டு தோன்றியது . இந்த வைரஸால் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் நோய் தோன்றியதாகக் கண்டறியப்பட்டது . இந்த H , N , வைரஸ் அதிக அளவில் வளர்ப்புப் பறவைகளைத் தாக்கியது .

18. அமெரிக்காவிலுள்ள தேசிய சுகாதார நிறுவனத்தல் பணியாற்றும் ராபர்ட் காலோ என்பவரும் பாரிஸ் நாட்டிலுள்ள பாய்ஸ்டர் நிறுவனத்திலுள்ள லூக் மாண்டக்னெர் என்பவரும் 1983 ஆம் ஆண்டு எய்ட்ஸ் ஏற்படுத்தும் நோய்த் தடுப்பாற்றலைக் குறைக்கும் வைரஸ்களை ( எச்.ஐ.வி ) பிரித்தெடுத்தனர் .

19. தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார் . உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி , மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மையானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது .

20. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி , நோய் எதிர்ப்பு திறனூட்டலால் ஒவ்வொரு வருடமும் 2 முதல் 3 மில்லியன் ( 20-30 இலட்சம் ) மக்கள் இறப்பிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.

🥦🧚🏼‍♂️Chemistry Important Notes!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️Group 1&2&4 - Important Notes!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள்!

🧚🏼‍♂️Click here to view

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி