10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில் - kalviseithi

Jul 23, 2020

10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்


10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை மாறினால் தான், பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

மேலும் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் 12ஆம் வகுப்புக்கான மறுத்தேர்வின் முடிவுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், அதேபோல் 11ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகளும் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பின் மூலமாக
    டெலகிராமில் தனிகுழு ஏற்படுத்தபட்டுள்ளது.
    பாதிக்கபட்ட2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று பாதிக்கபட்ட ஆசிரியர் நண்பர்கள் மட்டும் இக்குழுவில் சேரவும்

    https://t.me/joinchat/T4Eo3RkaUA_ZtncV0XN-6Q

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி