தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை - உயர் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2020

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை - உயர் நீதிமன்றம்


தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கெரோனா பரவலை தடுக்க ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு  கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள்  கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

1 comment:

  1. Kindly ban online classes form KG to primary classes. Both parents and teachers are under great stress. Please please even the students are exposed to radiation at this young age. Please consider.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி