ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை - CEO தெளிவுரை. - kalviseithi

Jul 10, 2020

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை - CEO தெளிவுரை.


1997-2000 ஆம் ஆண்டுகளில் SC / ST பிரிவினருக்கான இடைநிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு தற்பொழுதும் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அவ்வாசிரியர்கள் M.A. , M.Sc , M.Ed போன்ற முதுகலைப்பட்டம் ஆகியவற்றிற்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணையிடலாம் என இம்மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக் கல்வி வலயர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

அரசு ஊழியர்களுக்கான முன்ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் .42 பள்ளிக்கல்வித் துறை நாள் .10.01.1969 மற்றும் அபார்வை என் .747 பள்ளிக்கல்வித் துறை நாள் .18.08.1986 ன் அடிப்படையில் ஆசிரியர்கட்கு வழங்கப்பட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லையென்றும் அனைத்து வட்டாக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

12 comments:

 1. மிகவும் நல்லது

  ReplyDelete
 2. நான் 12.06.2020 அன்று பணி நியமனம் பெற்றேன் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊக்கம் ஊதியம் ரத்து எனக்கு பொருந்துமா.நான் 2005 ல் MA முடித்தேன்

  ReplyDelete
 3. ஆனால் treasury officer incentive வழங்க மறுக்கிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்க எந்த Audit வரம்பிற்குள் பணிபுரிகிறீர்கள்? Covai or Madurai?

   Delete
 4. கொரோனா பிரச்சனைக்காக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு அல்ல இது??????


  ஊக்க தொகையே கொடுக்க கூடாது என்பதற்காக வெளியிடப்பட்ட அரசானை என நினைக்கிறேன்.

  எனக்கும் Incentive நிறுத்தி வைத்து உள்ளார்கள்.

  ReplyDelete
 5. T.Sathyaraj நீங்க எந்த Audit க்குள் வேலை செய்கிறீர்கள்? காேவையா அல்லது மதுரையா?

  ReplyDelete
  Replies
  1. Covai audit வாய்ப்பில்லை சார். பலமுறை RTI, CM Cell எது பாேட்டாலும் No use. அவர்கள் தனி G.O கேட்கிறார்கள். ஆனால் மதுரை audit la incentive ok.

   Delete
  2. இதற்கு என்ன வழி sir....

   Delete
  3. மதுரை Audil-இல் உள்ள திருவாடானை சார்நிலைக் கருவூலத்தில் Incentive அனுமதிக்க மறுக்கிறார்கள்.

   Delete
 6. மதுரை திருப்பரங்குன்றத்தில் லும் அனுமதிக்க மறுக்கிறார்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி