+2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

+2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை!



பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து, பள்ளி கல்வித் துறையில் விசாரணை துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரானது. ஜூலை, 6ல், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருந்தார். இதற்காக, முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு, கோப்பும் அனுப்பப்பட்டது. ஆனால், மார்ச், 24ல் விடுபட்ட தேர்வை, மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்த, 780 மாணவர்களுக்கு தேர்வை நடத்திய பின், தேர்வு முடிவை வெளியிடலாம் என, தள்ளி வைக்கப்பட்டது. இந்த மறுதேர்வு, வரும், 27ல் நடக்க உள்ளது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட், ஜூலை, 13ல் வெளியானது. அதை தொடர்ந்து, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப அறிவிப்பை, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.மேலும், தனியார் கல்லுாரிகளும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை துவங்கின. அதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் போட்டி போட்டு, விண்ணப்பங்களை பெற்றனர். இத்தனைக்கு பிறகும், பள்ளி கல்வித் துறையின் தேர்வு துறை இயக்குனரகம் அமைதி காத்தது. இதேநிலை நீடித்தால், தமிழக பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் முன், மற்ற பாடத் திட்ட மாணவர்கள், தமிழக கல்லுாரிகளில் சேர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டது.

குற்றச்சாட்டுஇதையடுத்து, தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு, தேர்வுத் துறை இயக்குனருக்கு, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி மற்றும் சில அதிகாரிகள், இரவோடு இரவாக ஆயத்தமாகி, காலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, தேர்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியான விபரம், ஈரோட்டில் இருந்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே தெரியவில்லை. அதேபோல, பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் உள்ளிட்ட இயக்குனர்களுக்கோ, இணை இயக்குனர்களுக்கோ தெரியாது. அனைவரும், 'டிவி'யை பார்த்தே விபரம் அறிந்தனர். வழக்கமாக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் நேரம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

மாணவர்களும் அதற்கேற்ப தயாராவர்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்கல்வி துறை செயலகம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்டவற்றுக்கும், முன் கூட்டியே தகவல் அளிக்கப்படும்.இந்த முறை, உரிய, 'புரோட்டகால்' என்ற வழக்க முறைகளை பின்பற்றாமல், தேர்வுத்துறை இயக்குனர் ரகசியம் காத்து, பிளஸ் ௨ தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி கல்வித் துறை செயலகத்தின் உத்தரவை பின்பற்றுவதில், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு திட்டமிடலும், ஒருங்கிணைப்பு பணிகளும் இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது.

தாமதம் : தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியான போதும், கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானது மாலையில் தான் தெரியவந்தது. அவர்களுக்கு, பெரும்பாலும் இணையதள வசதி இல்லாததால், முன் கூட்டியே தகவல் தெரிந்து, பள்ளிகளுக்கு நேரில் சென்று மதிப்பெண்ணை தெரிந்து கொள்வர். இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.முதல்வர் அலுவலகம் முதல், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரையிலும், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது தாமதமாகவே தெரிந்துள்ளது. எனவே, 'புரோட்டகால்' மீறல் குறித்து, துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது.

17 comments:

  1. பள்ளிக்கல்வி மாணவர்களின் நலன் கருதி எடுத்த முடிவு சரியானதே.மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் SMS அனுப்பப்பட்டுள்ளது...அரசியல்வாதிகளை நம்பினால் ஒண்ணும் வேலைக்கு ஆகாது..

    ReplyDelete
  2. பள்ளிக்கல்வி துறை செயலாளர்,தேர்வுத்துறை இயக்குனர்,ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள் ...

    ReplyDelete
  3. புரோட்டா கால் இல்லை
    புரோட்டா கை இல்லை போய் அடுத்த வேலை பாருங்கள்

    ReplyDelete
  4. Nallavela sengottai intha news ah solliruntha kandipa varathu avlo raasi avarku antha manusan enna sonnalum opposite ah than Nadakum illati nadakave nadakathu

    ReplyDelete
    Replies
    1. Thapa pesadhinga plz... education minister..

      Delete
  5. அரசாங்கம் நாள் நட்சத்திரம் பார்த்து தேர்வுமுடிவை அறிவிக்கும். அதுவரை மாணவர்கள் கல்லூரியில் சேராமல் இருக்க முடியுமா? தேர்வுத்துறை முடிவு சரியானதே.

    ReplyDelete
  6. முன்பே அறிவிப்பு செய்தால்
    பள்ளி மற்றும் பிரவுசிங் சென்டர் கூட்டம் கூட்டமாக போவார்கள்.
    கொரோனா எற்படும் என்ற சிறந்த சிந்தனையாளர் ...

    ReplyDelete
  7. பத்திரிக்கைகள் பிரச்சினையை கிளப்புகின்றன விளம்பர வருவாய் குறைந்தால் ஆத்திரம் பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. தேர்வுத்துறையின் முடிவே சரி!!😊

    ReplyDelete
  9. இதே போல எப்பவுமே இந்த நடைமுறை இருக்கலாம், பெரும்பாலும் கல்லூரிகளில் இதே முறை நடந்து வருகின்றது, மாணவர்களின் மனஅழுத்தம் குறையும்.

    ReplyDelete
  10. இதே போல எப்பவுமே இந்த நடைமுறை இருக்கலாம், பெரும்பாலும் கல்லூரிகளில் இதே முறை நடந்து வருகின்றது, மாணவர்களின் மனஅழுத்தம் குறையும்.

    ReplyDelete
  11. அனைத்து துறைகளும் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்தால் எந்த அ.புள்ளிகளும் வாலாட்ட முடியாது... சுதந்திரமாக மக்களுக்கு பணியாற்ற விடுங்கள், நாடு நலம் பெறும்.

    ReplyDelete
  12. ஆமா result தேதி சொன்னா.. 32000 பேர் தேர்வு எழுதின பின்னாடி தான் முடிவு அறிவிக்கணும்னு எவனாச்சும் கேஸ் போடுவான்.. அப்புறமா தேர்வு எழுத மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு வழக்கு போடுவான்.. இப்போ எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி..
    யாருக்கும் தெரியாம result வந்திருக்காது .. தெரியாத மாதிரி நடிக்கிறாங்க..

    ReplyDelete
  13. Already we accepted lot of changes in education,so this is also like that.all is well.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி